Friday 3 July 2015

இயற்கை

முழுநிலா முற்றத்தில் வாசித்த கவிதை
---------------------------------------------------------------------

           இயற்கை

உன்னைப்பற்றி என்ன எழுத
இயற்கையிடம் கேட்டேன்.

மென்மையாக சிரித்து
பெண்ணைப்பற்றி எழுதென்றது..

ஏன் என்றேன்?

நானும் பெண்ணும் ஒன்றேயென
நகைத்தபடி கூறியது...

எப்படி என்றேன்?

இயற்கையையும் பெண்ணையும்
அனைவரும் ரசித்து மகிழ்வர் தானே?

ஆம்.

இருவரையும் போற்றிப்புகழ்வர் தானே?

ஆம்.

இருவராலும் பலனடைவர் தானே?

ஆம்.

இருவரும் சந்ததியைப்பெருக்குவோம் தானே?

ஆம் ஆம்

இருவரையும் கொஞ்சம் கொஞ்சமாய்
அழித்து சிதைத்து மகிழ்வர் தானே?

ம்ம்..

அழித்தாலும் அழியாமல்
மென்மேலும் உயர்வோம் தானே?

வியந்து ஆம் ஆம் உண்மை என்றவளை
இதமாய் கரம் கோர்த்து மகிழ்ந்தது
இயற்கை

8 comments:

  1. ஆகா! அருமை!அனைத்து வரிகளும் நினைத்து மகிழத் தக்கவை!

    அழித்தாலும் அழியாமல்
    மென்மேலும் உயர்வோம் தானே?
    அதிலென்ன ஐயம்! வேண்டாம் கேள்விக் குறி

    ReplyDelete
  2. சூப்பர் சகோ அருமையாக இருக்கிறது கவிதை

    ReplyDelete
  3. வாய்ப்பு கிடைக்கும்போது ஒரு முறை நாங்களும் கலந்துகொள்ள விரும்புகிறோம். கவிதை வரிகளை ரசித்தேன்.
    புத்தரைத் தேடும் எனது பேட்டியைக் காண அழைக்கிறேன்.
    http://ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html

    ReplyDelete
  4. ஆஹா,
    உண்மைதான், இருவரையும் கொஞ்சம் கொஞ்சமாய்
    அழித்து சிதைத்து மகிழ்வர் தானே?
    அருமையான வரிகள்,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...