அதிகாரம் நிறைந்த அதிகாரியிடம் இத்தனை வருடங்களில் பயந்து தான் பழகியுள்ளோம்...இனியும் அப்படித்தான் ...ஆனால்
சக ஆசிரியர் போல் அனைவரையும் மதிப்புடன் நடத்தி....
குறைகளைக்கூறி தண்டிக்காமல் நிறைவாகச்செய்யும் ஆர்வத்தை தூண்டியதுடன் ,
எந்தக்காலத்திலும் நிதானம் தவறாமல்...பணியைச் சிறப்புடன் செய்ததுடன் தான் பணி செய்த மாவட்டத்திற்கு சிறப்பு சேர்த்து...
.இவரைபோல் இனி ஒருவர் வருவாரா...என அனைவரையும் நினைக்க வைத்த பெருமைக்கும் மரியாதைக்கும் உள்ள
புதுக்கோட்டை மாவட்ட முதண்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் கோயம்புத்தூருக்கு மாற்றம் என்ற செய்தி அதிர்ச்சியைத்தருகிறது...
தமிழை நேசித்ததால்....புதுகையில் கணினியில் தமிழ் வளர பயிற்சி அளித்து,இலக்கியக்கூட்டங்களை வழிநடத்தி,புதுகை மாவட்ட பாறை ஓவியங்களை ஆராய்ந்து அதன் பெருமையை வெளிக்கொணர்ந்து....ஓய்வில்லா பணிகளால் வியக்க வைத்த மனித நேய மாண்பாளர்.....தனக்கென புகழ் தேடிக்கொள்வதை விரும்பாத மாமனிதர்..
எவரையும் குறை சொல்லாத அதிகாரியை நாங்கள் இழக்கிறோம்....
அரசுப்பள்ளியின் நலனுக்காகவே போராடும் தன்னலமில்லா மனிதரை புதுக்கோட்டை இழக்கிறது...இம்மாவட்டத்தில் இருக்கும் வரை இம்மாவட்டத்திற்குரியவராக பணிபுரிந்து வருகின்றேன் என்று அவர் கூறிய வார்த்தை குறிப்பிடத்தகுந்தது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாக்கினை வாழ்க்கையில் கடைபிடிப்பவர்......
இப்படியும் அதிகாரிகள் இருப்பார்கள் என வாழ்ந்து காட்டியவர்....புதுக்கோட்டை ஆசிரியர்கள் மனதில் மதிப்போடும் மரியாதையோடும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
எங்கிருந்தாலும் தமிழ் வாழும் அவரால்.....
வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை
வணக்கமும் நன்றியும் அய்யா...

முனைவர் நா.அருள்முருகன் அவர்களை வாழ்த்தி அனுப்புவோம்
ReplyDeleteபுதுகையைப் போல கோவையும் செழிக்கட்டும், வளரட்டும். அவருக்கு நம் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
ReplyDeleteமுனைவர் நா.அருள் முருகன் போன்றவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்
ReplyDeleteகோயமுத்தூரும் புதுக்கோட்டைப் போல் மலரட்டுமே
தம +1
மனமார்ந்த நல்வாழ்த்துகள்...
ReplyDelete