World Tamil Blog Aggregator Thendral: 36 வயதினிலே

Monday 25 May 2015

36 வயதினிலே

36 வயதினிலே
-------------------------------
அன்பு என்ற போர்வையில் அடிமையாகி ,
குடும்பம் என்ற வலையில் சிக்கி தன்னைத்தொலைத்து ,
தனக்கென எந்த குறிக்கோளும் இல்லாத,
குடும்பத்தினரால் ஒன்றும் தெரியாதவள் என மட்டம் தட்டப்படும் மனைவியானவள்
ஒரு கட்டத்தில் தன்னைத்தொலைத்துவிட்டதை அறியும் தருணம்
அவளை மரணத்தின் வாயிலுக்கு தள்ளி,
எல்லையற்ற சுய பச்சாதாபத்தை உண்டாக்கி ,
தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கையில் உண்மையிலேயே தான் அப்படித்தானோ என சிந்திக்க வைத்து விடுகின்றது.

இல்லை உனக்குள் புதைத்தவளை வெளிக்கொண்டு வாருங்கள்.சுயமரியாதை உடைய பெண்ணாக ,குடும்பத்தினரால் மதிக்கப்படும் பெண்ணாக மலருங்கள் எனக்கூறுவதாய்..அமைந்துள்ளது 36 வயதினிலே.
ஜோதிகாவை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல.
எளிமையான அழகு ...ஆடம்பரமில்லாத தன்னம்பிக்கை மிளிரும் தன்மை.
அவசியம் பெண்கள் பார்க்க வேண்டிய படமாய்...
மனைவியை மட்டம் தட்டும் ஆண்கள் பார்க்க வேண்டிய படமாய்...
ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாய்...
உணவில் கலக்கும் விசத்தை உலகிற்கு வெளிக்காட்டுவதாய்....
இனியாவது நகையும் புடவையும் தான் பெண்களுக்கு தெரியும் என்ற கருத்தை மாற்றுவதாய்...பெண் குழந்தைகளை...வளர்ப்போம்...

வாழ்த்துகள் ஜோதிகா...மீண்டும் உங்களின் வருகைக்கும் சமூகத்திற்கு தேவையான கருத்துகளைத்தந்த பாத்திரத்தில் நடித்தமைக்கும்

12 comments :

  1. நல்லதொரு படம் + விமர்சனம்...

    ReplyDelete
  2. அருமையான எளிமையான விமர்சனம்.
    த ம 2

    ReplyDelete
  3. படத்தைப் பார்க்கத்தூண்டிவிடும் அருமையான, அழகான, அமைதியான, பயனுள்ள விமர்சனம். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. அப்ப மீண்டும் ரேவதின்னு சொல்லூங்க. படம் பார்த்துவிட்டு வருகிறேன். நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  5. வணக்கம்
    படத்தை பற்றிய இரத்தின சுருக்கம் நன்று...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. இதன் மலையாளப் படத்தை பார்த்து இருக்கிறேன். இதற்கு சற்று காத்திருக்க வேண்டும். அருமையான படம். விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  7. உங்கள் குணதிசயங்களுடன் ஒத்துப்போவதால் உயர்த்தி எழுதி விட்டீர்கள் 80தை புரிந்து கொள்ள முடிகிறது சகோ யதார்த்தமான விமர்சனம் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. அருமையான விமர்சனம் சகோதரியாரே
    படம் பார்க்கிறேன்
    நன்றி

    ReplyDelete
  9. நல்ல விமர்சனம்
    அவசியம் பார்க்கத் தூண்டுகிறது
    மனைவியுடன் இவ்வாரம் பார்த்துவிடுவேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நல்ல தகவல். சமீபத்திய தமிழகப் பயணத்தில் பார்க்க நினைத்த படம். ஆனால் பார்க்க இயலவில்லை.

    ReplyDelete
  11. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...