Saturday 30 May 2015

30.05.15.ஆலங்குடி கலை இலக்கிய இரவு

30.05.15 இன்று நடந்த ஆலங்குடி கலை இலக்கிய இரவில் கவிச்சரம் கவிதைகளில் என் கவிதைகள்


மௌன விரதம்
முடிவுக்கு வந்தது
வகுப்பறைக்கு

-------------
உலகை சுற்றி பார்க்க
ஆசை என்றேன்-வா
டீக்கடை வைக்கலாம்
என்கிறான்.

-------------------------------------

முத்தம் ஒன்று கேட்டாள்
கமல் முத்தம் இதழோடு இதழாக
ரஜினி முத்தம் காற்றில் பறந்து
அஜீத் முத்தமோ ஆசைக்காட்டி மகிழும்
யார் முத்தமாய் முத்தமிட
மெல்ல நெருங்கியவனிடம்
உன்மத்தமானவனே
உன்முத்தமே போதுமெனெ வெட்கித்தாள்
----------------------------------


8 comments:

  1. டீக்கடையில் உலகம் இருக்கிறது.நல்ல உவமானம்/

    ReplyDelete
  2. அழகிய கவிதைகள். நன்றி. வாழ்த்துக்கள், தொடருங்கள்.

    ReplyDelete
  3. //30.05.15 இன்று நடந்த ஆலங்குடி கலை இலக்கிய இரவில் கவிச்சரம் கவிதைகளில் என் கவிதைகள்//

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள் !

    உலகமே .... டீக்கடையில் :)

    உன்மத்தமானவனே ........................ :)

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி.

    அழகான சொல்லாடலுடன் ௬டிய கவிதைகள். ரசித்துப் படித்தேன்.பகிர்ந்தமைக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள்.

    என் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கும் என் பணிவான நன்றிகள் சகோதரி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. அருமை டீக்கடை மிகவும் சிறப்பானது.

    ReplyDelete
  6. புதிய தளங்களை கவிக்கு தேர்ந்தெடுத்துள்ளீர்...
    நன்று
    தம +

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...