Thursday 16 April 2015

விதையானவள்.....துளிர்க்கிறாள்...

விதையானவள்.....துளிர்க்கிறாள்...

மயங்கிய நிலையில் பல நாட்கள் இருந்த அந்த குழந்தை விழித்தபோது வயிற்றில் வலியும் சுமையுடன் இருப்பது போன்ற உணர்வும் ஏற்பட கலங்கிய குரலில் கேட்டவளை அவளை கவனித்துக்கொண்ட பெண் கவலைப்படாதேம்மா  உன் மூளை பாதிக்கப்பட்டு வீங்கியதால் அதற்கான இடம் தேவைப்பட உன் மண்டை ஓட்டின் சிறு பகுதியை அறுத்து உன் வயிற்றுச்சதையோடு பொறுத்தியுள்ளார்கள் மீண்டும் அதை மண்டை ஓட்டில் பொறுத்தி விடுவார்கள் என்ற போது அந்த 13 வயது குழந்தை தன் கோணிய வாயால் புன்னகைக்க முயன்று ஏற்றுக்கொண்டாள்.எத்தனை மனத்துணிவு இருந்தால் சாதாரணமானவர் அச்சப்படும் நிலையை ஏற்கும் துணிவுடையவளாக இருக்கிறாள் என வியந்தாள் அவள்.கடைசியில் அந்த மண்டை ஓட்டை வைத்தால் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் பிளாட்டினம் வைத்து அவளின் தலைப்பகுதியை மூடியுள்ளார்கள் மருத்துவர்கள்.

அய்யோ என் குழந்தையின் புன்னகையைப் பறித்துக்கொண்டார்களே எனக்கதறி துடித்தார் அவளின் தந்தை...எப்படியும் அவள் பிழைத்துக்கொள்வாள் என நம்பிக்கையுடன் துவா செய்து கொண்டே இருந்தாள் அவள் தாய்....

உலகிலேயே அழகான பள்ளத்தாக்கு என கருதப்படும் சுவாட் பள்ளத்தாக்கில் பிறந்த அந்தக் குழந்தைதான் ...பெண்குழந்தைகளின் கல்விக்காக போராடிக்கொண்டிருக்கும் மலாலா யூசுப்சாய்.....பள்ளியிலிருந்து திரும்பும் போது தாலிபான் களால் தலையில் சுடப்பட்ட குண்டு அவளின் மூளையை உரசி தோளைத்துளைத்து...உலகே அந்தக்குழந்தைக்காக கண்ணீர் விட்டது.மருத்துவமனையில் மயங்கிய நிலையிலும் புத்தகப்பையை விரும்பியவள்...

                                 ”நான் மலாலா”

என்ற நூல் அவளது வரலாறை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது .கடந்த சில நாட்களாக அவளோடு வாழ்ந்த என்னுள் உறைந்து விட்டாள் ..பாகிஸ்தானின் நிலையை அவள் பிறந்த சுவாட் பள்ளத்தாக்கின் வரலாறை...மறைந்து வாழ வந்து அப்பகுதியையே பிடித்துக்கொண்டு மக்களை அழிப்பதையே அச்சுறுத்துவதையே இலட்சியமாகக் கொண்டு வாழும் தாலிபான்களின் உண்மை முகத்தை காட்டுகிறது... இந்நூல்.

பெரியோர்களுக்காக அனைவரும் போராட, குழந்தைகளுக்காக இன்று கூட நைஜீரியாவில் கடத்தப்பட்ட குழந்தைகள் அவர்களின் பெற்றோரை அடையும் வரைப்போராடுவேன் என தான் மிகவும் நேசித்த தன் நாட்டை இழந்து அயல் நாட்டில் வாழ்ந்து கொண்டு போராட்டத்தை தொடரும் அச்சிறுமிக்கு சென்ற ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருப்பதில் வியப்பில்லை....

அவளைப்போல் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்ற உறுதி மனதில் பிறக்கின்றது .அவளது தந்தைக்குத்தான் அந்த பாராட்டைக்கூற வேண்டும்....அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

1 comment:

  1. வணக்கம்

    பெண்களின் விடிவுக்காக வாழ்நாளை அர்பணிக்கும் ஒருசிறுமி... திருமதி ரஞ்சினி நாராயணன் அம்மா மலாலா பற்றி புத்தகம் எழுதியுள்ளார் படிக்க கிடைக்க வில்லை... தங்களின் கருத்தை படித்த போது உணர்ந்து கொண்டேன் புத்தகத்தின் அருமையை. த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...