Thursday 5 March 2015

5.3.15 mulu nila mutram-முழு நிலா முற்றம்

முழு நிலா முற்றம் -2 ஆவது கூட்டம்

இன்று முழு நிலா முற்றம் கூட்டம்  மாலை 7மணி அளவில் நிலவின் மேற்பார்வையில் கவிஞர் நீலா தலைமையேற்க இனிதாகத்துவங்கியது...

 ’
கவிஞர் அமிர்தாவின் மகள் செல்வி எழில் ஓவியா  புகலிடம் தேடிப்பறவையாய்” என்ற ஈழப்பாடலொன்றைப்பாடி அனைவர் மனதையும் ஒரு நிமிடம் உறைய வைத்தாள்...அவரின் இரண்டாவது மகள் கூட்டத்தையே வலம் வந்து கலகலப்பாக்கினாள்.


முத்துநிலவன் அய்யா ” பண்டை புகழும்...”என்ற நாட்டுப்பாடலொன்றைப்பாடி மேலும் இனிமைக்கூட்டினார்.
கவிஞர் பொன்.கருப்பையா அவர்கள்” காலநில மாறிப்போச்சு “ என்ற சுற்றுச்சூழல் பற்றிய பாடலொன்றை பாடி அசத்தினார்.


கவிஞர் மாலதி அவர்கள் தாய் மற்றும் நிலவு குறித்த கவிதைகள் வாசித்தார்.

கவிஞர் மகா.சுந்தர் அவர்கள் பாரதி மற்றும்  தமிழ் குறித்த மரபுக்கவிதைகளை வாசித்தார்.

அனைவருக்கும் தேநீரும் பிஸ்கட்டும் வந்து வயிற்று பசியைக்குறைத்தது.

கவிஞர் நீலா எழுதிய கவிதையை அச்சிட்ட அட்டையை பெண்கள் தின சிறப்பு என கவிஞர் மல்லிகா அவர்கள் வழங்கினார்கள்.

கவிஞர் நீலா அவர்கள்” சொல்லி[ல்] முடியாத கதை “ என்ற மது பற்றிய சிறுகதையை வாசித்தார்.

கவிஞர் வைகறை,கவிஞர் அப்பாஸ்,கவிஞர்.வையாபுரி,கவிஞர் அமிர்தா,கவிஞர்  ரேவதி,கவிஞர் உப்பைத்தமிழ் கிறுக்கன் ஆகியோரின் கவிதைகளால் நிலா முற்றம் நிரம்பி வழிந்தது.













நிகழ்ச்சியில்” பாஷோ”ஹைக்கூ இதழை முத்துநிலவன் அய்யா வெளியிட கவிஞர் நீலா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகனின் தொடர்ச்சியான” ஆலவாயன்”
நாவலில் பிடித்த ஒரு பகுதியை கவிஞர் கீதா கூறினார்.

கவிஞர் சுரேஷ் மான்யா சிறுகதை குறித்து விளக்கி கவிஞர் நீலாவின் சிறுகதையில் உள்ள சிறப்புகளை கூறி சிறந்த விமர்சனத்தை அளித்தார்.

கவிஞர் சூர்யா சுரேஷ்,கவிஞர்.சிவா,புதுக்கோட்டை நாணயவியல் கழகத்தைச்சேர்ந்த பஷீர் அலி,கவிஞர் பொன்னையா,கவிஞர் காசிநாதன்,கவிஞர் சோலச்சி மற்றும் நிறைய புதுக்கவிஞர்கள் வந்திருந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.

அறந்தாங்கியில் ஒரு பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு எனக்காக இக்கூட்டத்தில் கலந்து கொள்ள விரைந்தோடி வந்த தோழி ஜெயாவின் அன்பு மனதை நெகிழ வைத்தது

தமிழ்ச்சுவை அருந்திய நிலவோ மேலும் ஒளிர்ந்து தன் மகிழ்வை எதிரொளித்தது..

கீதா மற்றும் வைகறை நன்றி கூற முழுநிலா முற்றம் இனிதே முடிந்தது..





7 comments:

  1. நிலா முற்றம் சிறப்புற்றமைக்கு வாழ்த்துகள் போட்டோ ஏன் ? இவ்வளவு பெரிதாக கணினியையே மறைக்கும் அளவில் இருக்கிறது ?.

    ReplyDelete
  2. நிலா முற்றம் சிறப்பு
    தம 1

    ReplyDelete
  3. இம்முற்றத்தின் மூலமாக பல புதிய கவிஞர்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete
  4. தோழி இதழ்வெளியிடும் புகைப்படத்தில் பலநிலாக்களின்
    காட்ச்சி ...தமிழ்சுவை அருந்தியதாலோ .(நிலாமுற்றத்திலும்
    ஆகாயத்திலும்)

    ReplyDelete
  5. முழு நிலா முற்ற கூட்டம்............ ஆகா அருமை

    ReplyDelete
  6. எத்தனை சிறப்பாக நடந்திருகிறது கூட்டம்!!!!! உங்கள் சகோ தன் பத்தாம் வகுப்பு மாணவர்களோடு மாலையை கடத்திவிட்டு படியால் எங்களால் வரமுடியவில்லை:(( ஆனாலும் நேரில் பார்த்த நெகிழ்வை தருகிறது பதிவு:)

    ReplyDelete
  7. சிறப்பான ஒரு நிகழ்வு! அருமை!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...