Friday 13 February 2015

காதல்-14.02.15 இன்று நடந்த த.மு.எ.க.ச 11ஆவது மாநாட்டில் வாசிக்கப்பட்ட கவிதை

காதலர் தினமாமே
காதலைக்கேட்டேன்
ம்கும் என
சலித்துக்கொண்டது

கைத்தொடுவதும்
உடல் உரசுவதும்
மெய்தீண்டுவதும்
காதலென்று நினைப்பவர்களால்
அழிகின்றேன் நான் என்றது..

எங்கு வாழ்கிறாய்
என் கேள்விக்கு ....

விழி பருகி
மனதில் பதிந்து
உயிரில் கலந்த
உண்மைக்காதலில்
உயிர்க்கின்றேன் என்றது..

தடம் பதிக்கும்
காதலே அழிவில்லாதது என்றது
 புரியவில்லை என்றேன்

புன்னகைத்து என் கரம் கோர்த்து

மாமல்லனின் சிற்பக்காதல்
இராஜராஜ சோழனின் 
சிவன்  காதல்
இளங்கோவடிகளின்  தமிழ்க்காதல்
நம்மாழ்வாரின் பயிர்க்காதல்
பகத்சிங்கின் நாட்டின் காதல்
இவைகளை விட...
சிறந்தது எது

காதல் அழிவில்லாதது
இன்று காதலின் தினமல்ல
காதலர்களின் தினம் தானே

காதல் காமமல்ல
காமத்தை காதலென்று
கற்பிக்கும் கயவர்களை
வெறுக்கின்றேன் என்றே பகர்ந்து
 பறந்தது காதல்

8 comments:

  1. இப்போதெல்லாம் சினிமாக் காதலே சிறந்த காதலாகி விட்டது.

    ReplyDelete
  2. வணக்கம்
    உண்மையான வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அருமை,காதல் என்ற பெயரில் நடக்கும் சில கூத்துகளுக்கான
    நாள்.

    ReplyDelete
  4. இன்று காதலின் தினமல்ல
    காதலர்களின் தினம் தானே

    உண்மை
    உண்மை
    தம +1

    ReplyDelete
  5. வாசிப்பு கவிதை
    நேசிப்பு கவிதையானது!
    யோசிக்கும் மானிடர்
    யாசிக்கும் அருங்கவிதை!

    நன்றி! சகோதரி!
    (எனது காதலர் தின கவிதை காண வரலாமே?)

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. காதல் அழிவில்லாதது
    இன்று காதலின் தினமல்ல
    காதலர்களின் தினம் தானே

    அருமையான வரிக(ல்)ள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...