புதுகை நிலா முற்றம்..03.02.15
சென்ற ஆண்டில் பெரம்பலூர் செல்வகுமார் தோழர் நிலா முற்றம் என்ர தலைப்பில் நடுரோட்டில் நிலவின் ஒளியில் நிகழ்ந்த கூட்டத்தை பற்றி ஒரு பதிவு ....எழுதியிருந்தார்..நிலா எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று .நிலவின் ஒளியில் இலக்கியம் பருகுவதென்றால் அதைவிடவேறு சிறப்பு என்ன உள்ளது. ஏக்கத்துடன் படித்தேன்..
திடீரென வைகறை மற்றும் நிலவன் அய்யாவிடமிருந்து ஒரு மின்னஞ்சல்..இன்று நிலா முற்றம் நிகழ்வு புதுக்கோட்டை புதுக்குளத்தில் என...ஆஹா எனக்கூடிவிட்டோம்...
இதமான நிலவு எங்களை மேற்பார்வையிட ..புதுக்குள நடைப்பாதையில் முத்துநிலவன் அய்யா மற்றும் அவர்கள்துணைவியார் மல்லிகா மற்றும் வைகறையுடன் புதுக்குளத்தில் புதுகைக் கவிஞர்கள் அனைவரும் கூடினோம் ..இனிய நிகழ்வாய்..கவிஞர் செல்வா அவர்களின் இனிய கவிதையுடன் துவங்க..சுவாதி கவிதை வாசிக்க.என் கவிதைகளுடன் கவிஞர் நீலாவின் இனிய அனுபவங்களுடன் நிலா முற்றம் இனிமையாகி மாலதியின் குழந்தைகளுடனான அனுபவங்களுடன் அழகாக நிகழ்ந்தது நிலா முற்றம்...
இனி தொடர்ந்து நிகழும் நிலாவுடனான தொடர்பு..
மகிழ்வான சந்திப்புகள் தொடர வாழ்த்துகள்
ReplyDeleteநிலா முற்றங்கள் தொடரட்டும் சகோதரியாரே
ReplyDeleteஅருமையான நிகழ்வு
தம 1
அடுத்த முறை நானும் வருகிறேன்...
ReplyDeleteதொடரட்டும் தங்கள் அனைவரின் நிலா முற்றங்கள், அந்த நிலாவினைப் போல்! இனிமையான சந்திப்பு!
ReplyDelete