Sunday 11 January 2015

புதுகையில் நல்லிணக்க பொங்கல் விழா


புதுகையில் நல்லிணக்க பொங்கல் விழா

இன்று புதுக்கோட்டை மாவட்ட திருவருள் பேரவையும் ,புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக்கழகமும் இணைந்து நடத்திய நல்லிணக்க பொங்கல் விழா இன்று 12.1.15 மாலை புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழக சில்வர் ஹாலில்  நடந்தது..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க...திரு சீனு.சின்னப்பா அவர்களின் தலைமையின் கீழ் நிகழ்ந்த இவ்விழா....உலகத்தோருக்கு ஒரு முன் மாதிரியான விழாவாகும் .இவ்விழாவில் மத வேறுபாடின்றி இந்து,முஸ்லீம்,கிறித்தவர்கள் ஆகிய அனைவரும் கலந்து கொண்ட நல் விழா...

இவ்விழாவில் மும்மதத்தைச் சேர்ந்த மூவருக்கு மனித நேய மாண்பாளர் விருதுகளும்,மேலும் மூவருக்கு இளம் நல்லிணக்க நாயகர்கள் என்ற விருதுகளும் தகுதி வாய்ந்தோருக்கு அளிக்கப்பட்டுள்ளது...

இளம் நல்லிணக்க விருது வாங்கியவர்கள்

முகநூலில் உள்ள நண்பர்கள் திரு .தங்கம் மூர்த்தி...
,டாக்டர் .கே.எச்.சலீம்,
மற்றும் திரு .ஆரோக்கியசாமி..ஆகியோர்...

மும்மதத்தினரும் இணைந்து கொண்டாடிய இவ்விழாவில் பொங்கல் பரிசு 6 பேருக்கு கொடுக்கப்பட்டது.இவ்வாறே கிறிஸ்துமஸ் ,ரம்ஜான் ஆகிய பண்டிகைகளிலும் அனைவரும் இணைந்து கொண்டாடுவர்..
இறுதியில் பொங்கலுடன் சிறப்பான உணவு வழங்கப்பட்டது..

மனிதத்திற்கு மதம் ஒரு தடையில்லை என்பதை இவ்விழா உணர்த்தியது...இவ்விழா சிறப்புடன் நடக்க முக்கியக்காரணமாக சொல்லின் செல்வர்.திரு சம்பத்குமார் சார் அவர்களே காரணம்..இன்று அவர்களுக்கு பிறந்த நாள் என்பதை கூறி வாழ்த்தினார்...தங்கம் மூர்த்தி சார்...மனம் நிறைந்த விழாவாக இன்றைய விழா அமைந்தது...

 இன்று மாலை எனை அழைத்து இவ்விழாவில்  என்னை கவிதை படிக்கச்சொன்ன திரு .சம்பத் குமார் சாருக்கு மனம் நிறைந்த நன்றி.

என் கவிதை
----------------------
தைமகளே வருக!
செந்தமிழ்ப்பா பாடியுன்னை
மெய்யுருக வரவேற்கின்றேன்.

மதம் கொண்ட மனம் விடமாக
மதத்தால் பிரிந்த மனங்களை
தைமகளே நீ தை..மகளே

இனத்தால் பிளவுண்ட இதயங்களை
மனத்தால் தமிழரென்று கூறியே
தைமகளே நீ மனதைத் தை மகளே

உழவரெல்லாம் எலி உண்ண
இளைஞரெல்லாம் எலி பிடித்த கையோடு
இருக்கும் நிலை மறந்து
தமிழ் மறந்து வாழ்ந்திடும்
தமிழினத்தை ஒன்றிணைத்து
தைமகளே நீ தை மகளே..

எவர் வந்து பிரித்தாலும்
எந்நாளும் தமிழினம்
இணைந்தோங்கும் நாளின்று என்றே
இணையில்லா தைமகளே
பொங்கும் மனதுடன்
நல்லிணக்கப்பொங்கல் விழாவில்
வாழ்த்துகின்றோம்..
வாழ்க நீ!வளர்க நீ!





6 comments:

  1. புதுகை நகர் வரவர விருதுநகராகி வருகிறது.
    நல்லவா்களைப் பாராட்டி, மேலும் நல்லவா்களாகி மக்கள் சேவையில் மலர வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. வணக்கம் சகோ..நான் தான் உங்க பேச்சைக்கேட்க முடியலன்னு புலம்பிகிட்டு இருந்தேன்..

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்
    தம 1

    ReplyDelete
  4. மனிதத்திற்கு மதம் ஒரு தடையில்லை... சிறந்த விழா...

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. நல்லதொரு விழா. தங்கள் கவிதையும் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...