Monday 8 December 2014

மனிதம் துளி-2

இன்றைய சிந்தனை

மனிதம் துளி-2

ப்ரீத்தி ஸ்ரீநிவாசன்...

.நீங்கள் அறிந்தவர் தான் .17 ஆண்டுகளுக்கு முன் 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழகக்கிரிக்கெட் அணியின் கேப்டன்..சிறந்த நீச்சல் வீராங்கனை .ஹூஸ் இஸ் ஹூ அமாங் அமெரிக்காஸ் ஸ்டூடண்ஸ் திட்டத்தின் கீழ் படித்தவர் ப்ரீத்தி.அமெரிக்க பணியை நிராகரித்து கிரிக்கெட்டில் கவனம் சேர இந்தியாவிற்கு வந்தவர்.1997இல் அவர் 19வயதுக்குட்பட்டோருக்கான மாநில அணியின் நியமிக்கப்பட்டு தேசிய அளவிலும் வெற்றி பெற்றார்.




கடலில் தோழிகளுடன் நீச்சலடித்துக்கொண்டிருந்த போது தண்டுவடத்தில் ஏற்பட்ட மோசமான விபத்தால் தலைக்குக் கீழ் அத்தனை உறுப்புகளும் மரத்து போக சக்கர நாற்காலியில் முடங்கிப்போக வேண்டிய நிலை.ஓடிய கால்கள் மரத்தன .தலை மட்டும் செயல்படும் நிலை..

ஆனால் அவரது போராடும் குணத்தை முடக்கிவிடவில்லை.தன்னைப்போல பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையும் உதவியும் அளிப்பதற்காக அவர் “சோல்ஃப்ரீ
‘” எனும் சமூக அமைப்பை துவக்கி செயல்படுத்தி வருகின்றார்.

பாரபிலெஜிக்,குவாட்ரிபிலெஜிக் பாதிப்புக்கொண்டவர்களை குறிப்பாக பெண்களின் அனுபவத்தைக்கேட்டு கலங்கிய இவர் அவர்களின் ஆன்மாவிற்கு சுதந்திரம் அளிக்கும் நோக்குடன் இந்த அமைப்பைத் துவக்கி நடத்தி வருகின்றார்...

நன்றி-:ஃபெமினா

எல்லா உறுப்புகளும் நல்லா இருந்தும் நாம் என்ன செய்கின்றோம்.....?

3 comments:

  1. பாராட்டப்படவேண்டிய பெண். எல்லா உறுப்புகளும் நல்லா இருந்தும் நாம் என்ன செய்கின்றோம்? கேள்வி தலைகுனிய வைக்கிறது.

    ReplyDelete
  2. மிகவும் போற்றிப் பாராடப்படவேண்டிய பெண். நெற்றியடிக் கேள்வி...

    ReplyDelete
  3. பாராட்டப் பட வேண்டியவர் தான்.....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...