காரணம் யார்...?
திருமணம் செய்யத்துடிக்கும் குழந்தைகளை தடுக்க முடியாமல் தளர்ந்து போகின்றனர்..ஆசிரியர்கள்.
.வாழ்க்கையின் இலட்சியமே...திருமணம் தான் என்பது போல குழந்தைகள் மனதில் நஞ்சைப்பதித்தது யார்.?
..படிக்கும் குழந்தைகளிடத்தில் காதலே முக்கியமென தூண்டிவிடுவது யார்.?
.பத்தாம் வகுப்பாவது முடித்தால் பிற்கால வாழ்க்கைக்கு பயனாகும் என ஆசிரியர்கள் கெஞ்ச பிடிவாதமாய் மறுத்து மணவாழ்க்கையை தேர்வு செய்யும் குழந்தைகள்...பிற்காலத்தில் வருந்தும் போது..கையறு நிலையில் அனைவரும்...
கல்லூரிக்காதல் ,பள்ளிக்காதலாகி,இனி நர்சரிக்காதலில் வீழ்ந்து அழிந்து போகட்டும்..காசு நோக்கி ஓடும் சமூகம்...திரும்பிப்பார்க்கையில் குழந்தைகள் தன் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள்..
குழந்தைபெற்றோர்களைப்பார்த்து கண்ணீர்விடுவதைத்தவிர வேறென்ன செய்ய...கண்டித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளும் குழந்தைகளைப்பார்த்துக்கொண்டிருக்கத்தான் வேணுமா...?
இணையும் கரங்களின் குரலாக
---------------------------------------------------------
கொடுத்தால் என்ன?
பள்ளிக்குழந்தைகள் காதலிப்பது போல் படமெடுக்கும் திரைத்துரையினருக்கும்.
திருமணவயதுக்குமுன் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினருக்கும்,
அதைப்பார்த்தும் தட்டிக்கேட்காத சுற்றத்தினருக்கும்...
திருமணம் செய்துகொடுக்கும் பெற்றோர்கட்கும் கடுமையான தண்டனை கொடுத்தால் என்ன?
குறைந்த வயது திருமணத்தால் குழந்தைகளைக்கவனிக்கமுடியாமல்..வளரும் சமுதாயம் சீரழியும் நிலையைத்தடுக்கலாமே...இப்படி கொஞ்சம் பேருக்கு கொடுத்தால் அடுத்தவங்க பயப்படுவாங்கள்ல...!

இதற்க்கு சினிமா ஒரு முக்கிய காரணம், அடுத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி கல்லூரி அமைத்தால் இதில் சிறிதளவாயினும் மாற்றம் காணலாம்.
ReplyDeleteஊடகங்களே முக்கியக்காரணம்..உண்மை.சகோ
Deleteயாரையும் குற்றம் சொல்ல முடியாது .எல்லோருமா இப்படி சினிமாவைப் பார்த்து கெட்டுப் போகிறார்கள் ?அவரவர் முடிவு அவரவர் தலையில் :)
ReplyDeleteத ம 1
இருப்பினும் சினிமா முக்கிய காரணமாய் இருப்பதை மாணவிகளுடன் பழகுவதால் உணரமுடிகின்றது சார்..
Deleteமாணவர்களும் மாணவிகளும் தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் சகோதரியாரே
ReplyDeleteதேர்ச்சி ஒன்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து,
மாணவர்களின் எதிர்கால வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்
உண்மை அண்ணா எப்படியாவது அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்...
Deleteமட 2
ReplyDeleteநன்றி அண்ணா.
Deleteசினிமா, தொலைக்காட்சித்தொடர் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இவ்வாறான நிலைக்குக் காரணமாகின்றன. பள்ளிக் காலம் தொடங்கி அவர்களை பக்குவப்படுத்துவது பெற்றோர்களின் பொறுப்பாகும். பெற்றோர்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கவனித்து அவர்களுடன் நண்பர்கள் போலப் பழகி வந்தால் அன்றாட பழக்கவழக்கங்கள் பற்றி பேசினால் இவ்வாறான தடுமாற்றங்கள் அவர்களுடைய மனதில் பதியும் வாய்ப்பு குறையும்.
ReplyDeleteநிச்சயமாக அவர்கள் தொலைக்காட்சிக்கு அடிமையாகி குழந்தைகளைத்தொலைக்கின்றனர்.சார்
Deleteதிரைப்படத்தால் புரையோடிப் போயிருக்கும் இந்த சமூகத்தை மாற்ற பெரும் காலம் தேவைப்படும். ஆனால் ஒரு ஆரம்பம் நிச்சயம் எங்காவது இருக்க வேண்டுமே.
ReplyDeleteஅந்தப்புள்ளியைத்தான் தேடுகின்றேன் சார்
Deleteஇனி வரும் காலங்களில் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை.
Deleteஅது வெறும் நிழல் என்று உணரும் தருணம் வர வேண்டும்...
ReplyDeleteவிரைவில் வரவேண்டும் சார்
Deleteஇந்த மாற்றம் எப்பொழுதிலிருந்து ஆரம்பிக்கிறது எனப்பாருங்கள்.1991 க்கு அப்புறம்தானே?
ReplyDeleteஆம் ..உண்மை சார்
Deleteதவிர நாம் சிறுவர்களாய் இருக்கும் போதும் படிக்கும் போதும் நம்மை பெற்றோர்கள் வளர்த்தார்கள்.ஆசிரியர்கள் சொல்படி கேட்டோம்,பாதிக்குப்பாதியாவது,இன்று பிள்ளைகளை வெளிச்சமூகமும் கலாச்சாரமும் வளர்க்கிறது,அதுதான் இவற்றைக் கற்றுக்கொடுக்கிறது.சமூக க்கலாச்சாரத்திலிருந்து எதை எடுக்க வேண்டும் எதை விடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்பவர்கள் சரியாக முடிவு செய்தாலே இது போன்றவைகள் நடக்காது தடுக்கலாம் என நினைக்கிறேன்/
ReplyDeleteஆம் சார்...பெற்றோர்களும் ஆசிரியர்களும் முடிவெடுக்க வேண்டும்.
Deleteவாழ்க்கையின் இலட்சியமே...திருமணம் தான் என்பது போல குழந்தைகள் மனதில் நஞ்சைப்பதித்தது யார்.?//
ReplyDeleteஆஹா எங்களின் கருத்தும் அதுவே! மிக மிக அருமையான ஒரு பதிவு சகோதரி! நிச்சயம நம் சமூகம்தான். சமூகம் என்பது பெற்றோர், சுற்றத்தார், ஊடகங்கள் உட்பட்டதுதானே...
நம் குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தில் பல நல்ல ஆராய்ச்சிகளையும், சாதனைகளையும் புரிய விழைந்தாலும், இந்தச் சமூகம் கல்யாணம் என்ற ஒன்றில் கட்டிப்போட்டுச் சிறைக்கைதிகளாக்கி விடுகின்றது...மிகவும் வருத்தத்திர்கு உரிய ஒன்றே....ம்ம்ம்ம் இதைப் பற்றியும் நம் கல்வி பற்றியும் ஒரு இடுகை தயாராகிக் கொண்டிருக்கின்றது.....
ஆதரவு கொடுப்போம்.....இதைப் பதிவு செய்த தங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
நன்றி சார்
Deleteஇளம் வயதுத் திருமணங்கள் பெரும்பாலும் கிராமத்திலேதான் நடைபெறுகின்றன. சினிமாக்காரங்களுக்கு 'தன வீட்டுப் பிள்ளைகளும்' இதைப் பார்ப்பாங்கனு அறிவு வேணும்.சட்டத்தால் மட்டுமே இவற்றைத் தடுக்க முடியாது.
ReplyDeleteசேர்ந்து குரல் கொடுப்போம்.!
இதில் கிராமம் நகரம் வேறுபாடில்லை சகோ...பத்தாம் வகுப்பிலேயே திருமணம் செய்யும் ஆவலோடு நிறையக்குழந்தைகள் உள்ளனர்.
Deleteவணக்கம்
ReplyDeleteவழிப்புணர்வு செய்தால் சில மாற்றங்கள் வரலாம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஹலோ! நண்பரே !
ReplyDeleteஇன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு
சமூக சீர்கேடுகள்!
ReplyDeleteமீடியாக்களிடம் இருந்து நமது குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் தன் அக்கா!! பொறுப்பான சிந்தனை அக்கா!
ReplyDelete