Sunday 12 October 2014

தீபாவளி...அலைகள்

தீபாவளி...அலைகள்

                              அம்மா அந்த பாவாடை நல்லாருக்கும்மா...எடுத்துக்கவா...ம்ம்ம்..வில கூட இருக்கேம்மா ...அடுத்த தீபாவளிக்கு எடுக்கலாம்மா..சரிம்மா இந்த ப்ரௌன் கலர் பாவாடையே நல்லாருக்குல்ல .இதையே எடுத்துக்கலாம்மா...

அம்மா ,அப்பா இன்னும் வெடி வாங்கலயே..எப்பம்மா வாங்குவோம்..வாங்கலாம் இரு ..பறக்காத...ஏங்க பிள்ளைகள கூட்டிப்போய் வெடி வாங்கிட்டு வர்றீங்களா..பார்ப்போம் பார்ப்போம்..
னு சொல்லிட்டு அப்பாவே போய் வாங்கி வச்சுருப்பாங்க..எனக்கும் தம்பிக்கும் சமமா பிரிச்சு கொடுப்பாங்க..

தினமும் மதியம் வெயிலில் காயவச்சு எடுத்து வைப்போம்..ராக்கெட் எல்லாம் கனவுதான்...ஒத்த வெடி பாக்கெட் இரண்டு பேருக்கும் கட்டாயம் இருக்கும் .நாள் பூரா வெடிப்போம்...

சோமாஸ் செய்ய உட்கார்ந்தாங்கன்னா பக்கத்து வீட்லருந்து வந்து ஒண்ணா உட்கார்ந்து அரட்டையோடு சுட்டு.... டின்னுல அடுக்கி வச்சுருவாங்க...முருக்கு எல்லாம் டின்ல தான்...தீபாவளிக்கு மட்டும் தான் பலகாரம்.

மற்ற நாட்களில்..தியேட்டரில் 25 பைசாவிற்கு கிடைக்கும் சம்சாவிற்காகவே சினிமாக்கு போவோம்...இப்பவும் சம்சா மட்டுமே பிடித்த பலகாரமாய் உள்ளது.பக்கத்து வீட்ல என்ன பலகாரம் செய்தாலும் நாங்களும் அங்கே  ஆஜராகி விடுவோம்...வட்டவட்டமாய் முருக்கு சுடும் கண்ணகி அம்மாவை வியந்து பார்ப்போம்...

மாமி வீடு,பெரியம்மா வீடுகளில் என்ன செய்சுருக்காங்கன்னு லிஸ்டே எடுப்பாங்க...சிறுவயதில் மாமா வீட்டிலேயே எல்லோரும் வளர்ந்ததால அவங்க வீட்ல எடுக்கும் போது எனக்கும் தம்பிக்கும் சேர்த்தே எடுப்பாங்க....ஒரு கருப்புகலர் பெல்ட் வச்ச கவுன் அது  ஒரே மாதிரி அஞ்சாறு பேருக்கு மேல போட்டுக்கிட்டு வரிசையா நின்னோம்..கண்ணு பட்டுரும்னு ஆத்தா{அப்பாவின் அம்மா}எல்லோரையும் உட்கார வச்சு சுத்தி போட்டாங்க..

தீபாவளி அன்று அதிகாலை ஆத்தா 3மணிக்கே எழுந்து அடுப்புல பலகாரம் சுட்டுகிட்டு இருப்பாங்க...தலைல எண்ணைய் வச்சு 4மணிக்கெல்லாம் குளிச்சு முடிச்சு ..பாதுகாத்த வெடியெல்லாம் காலி பண்ண ஆரம்பிப்போம்....இதுல கார்த்திகைக்கு வேணும்னு தனியா வேற எடுத்துக்குவாங்க..

விடிந்ததும்..வரிசையா பலகாரம் எல்லா வீட்டுக்கும் இருக்கும் ...புது டிரஸ போட்டுக்கிட்டு பெருமையா ஓடி ஓடி குடுத்து வருவேன்...மாமா வீட்டுக்கு போனா எங்களுக்குன்னு வெடிதனியா கொடுப்பாங்க...டிரஸ் இருந்தா வாங்கிகிட்டு....கால்ல பொத்துன்னு விழுவோம் ....திருநீறு பூசி காசு கொடுப்பாங்கள்ல ..இதப்போல 3 வீட்ல வசூலிச்சபின்ன..மறுபடி வெடி வெடிக்க கிளம்பிடுவோம்...வீடு நிறைய ஆட்கள்...மனம் நிறைய சந்தோஷம்....பொங்கும்..

மனம் நிறைந்த மகிழ்ச்சி இன்று கணக்கின்றி புடவை எடுக்கும் போதும், வெடி வாங்க முடிந்தாலும் அந்த மகிழ்ச்சி இப்ப இல்ல...என் குழந்தமைக்காலம் எப்போதும் மனதில்...ஏக்கத்தை உண்டாக்கிக்கொண்டு....எனக்கு மட்டும்தானா...!

18 comments:

  1. சொல்லிச் சென்றவிதமும்
    முடித்த விதமும் அருமை
    எங்கள் உணர்வுகளை அப்படியே பதிவு
    செய்ததைப் போலிருந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர்.

      Delete
  2. ஆமால்ல எல்லாம் இப்ப போல் கண்ணுக்குள் நிற்கிறது எல்லாம் மிஸ் பண்ணிட்டோம். போனவை போனவைதான் அந்த நேரம் காலம் திரும்ப வரவே வராது. பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா.. நன்றிம்மா

      Delete
  3. வணக்கம்
    காலம் தகுந்தாற்போல் பதிவு அமைந்துள்ளது சொல்லிய விதம் நன்று பகிர்வுக்குவாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ

      Delete
  4. உங்களுக்கு மட்டுமல்ல சகோதரி
    அனைவருக்கும் ஏக்கத்தைத் தரும் நினைவுகள்தான் இவை
    மீண்டும் ஒரு இளமைக்காலம் வாராதா என்ற தவிப்பினைத் தரும் நினைவுகள்தான் இவை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோ...நிறைய இழந்த உணர்வு..

      Delete
  5. //எப்போதும் மனதில்...ஏக்கத்தை உண்டாக்கிக்கொண்டு....எனக்கு மட்டும்தானா...!//

    ஊஹூம்.............. அநேகமா எல்லோருக்குமே இருக்கும்:(

    வருசத்துக்கு பொங்கல், தீபாவளி, பொறந்தநாள் இப்படி கட்டாயம் மூணு ட்ரெஸ், பள்ளிக்கூடத்துக்குன்னு ஒரு நாலு செட் சாதாரண சீட்டித்துணியில். அவ்ளோதான் வார்ட்ரோப்.

    இப்போ நினைச்சப்போது வாங்கிக் குவிச்சாலும்..... பழைய மகிழ்ச்சி காணாமப்போயிருச்சே:(

    ReplyDelete
    Replies
    1. உண்மை...குறைவான பொருள்களில் நிறைய மகிழ்ச்சி இருந்தது.நன்றி

      Delete
  6. தீபாவளி நினைவலைகளை அழகாய் பகிர்ந்த விதம் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. எல்லோருக்குமான நினைவுகள்.
    இப்போது தீபாவளிக்கு லீவு கூட கிடைப்பதில்லை.

    ReplyDelete
  8. நல்ல அனுபவ நினைவலைகள்! அந்தக்காலம் போயே போச்!
    நல்ல எழுத்து நடை!

    ReplyDelete
    Replies
    1. போச்ச்...நன்றி சகோ..

      Delete
  9. தீபாவளி நினைவலைகள் நன்று ,அப்பொழுது நீங்கள் வாங்கிக்கொள்கிறவராக,இப்பொழுது நீங்கள் வாங்கிக்கொடுக்கிறவராக/

    ReplyDelete
    Replies
    1. ஆனா எவ்ளோ கொடுத்தாலும் திருப்தி இல்லாத மனம் .

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...