முப்பெரும் விழா..!05.10.2014
கவிஞரும் சகோதரருமான முத்துநிலவன் அய்யாவின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா 05.10.14 இல் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் மிகச்சிறப்பாக நடந்தது.
மதியமே முந்திக்கொண்டு வான்மழை வந்து வாழ்த்து பூக்கள் தூவ, விழா இனிமையாய் மண்ணின் மணத்துடன் துவங்கியது.
தனது வெண்கலக்குரலால் விழாவைத் தொகுத்து கூட்டத்தைத் தனது கட்டுக்குள் வைத்து மிகச் சிறப்பாக நடத்தி விழாமல் பார்த்துக் கொண்டார்..கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்..
கரிசல்குயில் கிருஷ்ணசாமி தனது கானமழையால் அனைவரின் மனதையும் கவர்ந்தார்.
பேச்சாளர்கள் அனைவரும் தகவல் களஞ்சியங்களாக..கேட்போரை .கேளாதவரை பிணிக்கும் சொற்பொழிவைத் தந்து கூட்டத்தைச் சிறப்பித்தனர்...நகைச்சுவையான பேச்சுக்களால் அரங்கம் குலுங்கியது..
நிரம்பித் ததும்பியது நகர்மன்றம்...முத்துநிலவன் அய்யாவின் மேல் உள்ள அன்பாலும்,செவிக்கினிய பேச்சாலும் உறைந்து மகிழ்ந்து இருந்தனர்.
நகர்மன்றத்தில் உறவினர்களாலும் ,நண்பர்களாலும்..நிறைந்த இருந்த காட்சி முத்துநிலவன் அவர்கள் நிறைய மனிதர்களை தனது அன்பால் சொத்துக்களாய் சேர்த்து வைத்துள்ளதை எடுத்துக்காட்டியது..
தமிழ்நாட்டைத் தாண்டியும் அவருக்கு இருக்கும் வலைப்பூக்களின் உறவுகள் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர்..
விழா இதமாக ,இனிமையாக,துள்ளி ஓடும் நதியைப்போல மனதை,கண்களை ,செவியை நிறைந்து இருக்கின்றது...
வாழ்த்துகள் சகோதரருக்கு...
எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் சகோதரியாரே
ReplyDeleteநிச்சயமாக சகோ..நன்றி
Deleteகேட்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது தோழி கண் முன்னே கட்சிகளாய் தெரிந்தது நிகழ்ச்சி நிலவன் அண்ணாவின் அன்பு முகமும் சந்தோஷமும் அஹ்டில் நிறைவாகத் தெரிந்தது தோழி. அவர்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....!இவற்றை அறியத் தந்த தக்களுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் தங்களுக்கும்.
ReplyDeleteநன்றிமா அருமையாக நடந்தது திருவிழா போல..
Deleteவாழ்த்துக்கள்/
ReplyDeleteநன்றி சார்.
Deleteபோற்றுதலுக்குரியவர் ஐயா முத்துநிலவன் அவர்கள்.ஆழமான அறிவாற்றல் பெற்றிருந்தும் சிறிதும் செருக்கிலாப் பண்பாளர்.அவரது பணி சிறக்கட்டும்
ReplyDeleteஉண்மை சார்.மனிதராக வாழும் மனித நேயமிக்கவர்.
Deleteவணக்கம்
ReplyDeleteநிகழ்வு சிறப்பாக அமைந்துள்ளதை தங்களின் பதிவு வழி அறிந்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சுருக்கமாகச் சொன்னாலும் விளக்கமாகச் சொன்னீர்கள். எனது பாராட்டுக்கள்! உங்களது இந்த பதிவினை எனது பதிவினில் சுட்டி காட்டி இருக்கிறேன்.
ReplyDeleteத.ம.2
நன்றி சார்..பார்க்கின்றேன்
Deleteவாழ்த்துக்கள் ஐயாவுக்கு!
ReplyDeleteஇந்த மாதிரி தெளிவா எல்லாம் எனக்கு எழுததேரியலையே:(( அருமை அக்கா!
ReplyDeleteஅருமை கீதா..விழா சிறப்பாக இருந்தது. நீங்கள் சொல்வது போல அண்ணனின் அன்பால் நிறைந்த கூட்டம். உங்கள் அன்பும், நிலவன் அண்ணா,அண்ணி, மைதிலி, கஸ்தூரி அண்ணா ஆகியோரின் அன்பும் நெகிழவைத்தது..ரொம்ப மகிழ்ச்சி கீதா.
ReplyDeleteநாங்களும் அதற்கு சாட்சியாய் இருந்தோம் கவிஞரே!
ReplyDeleteதங்களின் பதிவு காட்சிகளைத் தொகுத்துக் காண்பது போல்அமைந்தது.
வாழ்த்துகள்!
விழா பற்றிய வர்ணனையை அழகாக கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்களே சகோ.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்லதொரு விழாவாக அமைந்ததற்கு என் மகிழ்சிகளும் வாழ்த்துகளும்...
ReplyDeleteவிழா வெற்றியடைந்ததற்கு எங்கள் வாழ்த்துக்களை இணைத்துக் கொள்ளுங்கள் சகோதரி! மிக அழகான விவரணம்!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நிகழ்வுப் பதிவு அருமை சகோதரி..
ReplyDelete