Monday 22 September 2014

பறக்கிறேனே அம்மா



நனைந்து நடுங்கிய
கறுப்புக்குஞ்சை
கையில் தந்து
காக்கா தூக்காமல்
காத்திடுவெனென
எதிர்வீட்டார் கூற

பிறந்த குழந்தையை
அணைப்பதுபோல் உள்ளங்கையில்
அடக்கி வாளிக்குள் வைக்க

சிலமணித்துளிகளில்
அட நான் பறக்கிறேனே .....அம்மாவென
பறந்து கண்ணாடியை முட்டி
 பயப்பட வைத்து....

தாய்க்குருவி அலற
காற்றில் தவழ்ந்தது
காக்கையை ஏமாற்றி...

8 comments:

  1. இளங்கன்று பயமறியாது...

    ReplyDelete
  2. காட்சிப்படுத்திய கவிதை அருமை! நன்றி!

    ReplyDelete
  3. ஆஹா... கவிதை அருமை சகோதரி...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் தொடர்க

    ReplyDelete
  5. சே என்னம்மா எழுதறீங்கம்மா....சகோதரி!

    ReplyDelete
  6. பறவையாய் மாறிச் சிகரங்களைத்தொட வாழ்த்துகள் கீதா.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...