Thursday 18 September 2014

துலக்கம்

 துலக்கம் -குறுநாவல்
பாலபாரதி  -  விகடன் பதிப்பு

இன்று வங்கியில் ஒரு பணி என்பதால் சென்று அங்கு தாமதிக்கும் காலத்தைக் கழிக்கும் பொருட்டு பாலபாரதியின் துலக்கம் நாவலை எடுத்து சென்றேன்....

எங்கிருக்கிறேன் என்பதையே மறக்கடித்து நாவலில் புகவைத்து விட்டது நாவலின் கரு.என்னால் மீள முடியவில்லை....ஒரு ஆட்டிசம் குழந்தையை மையமாகக் கொண்ட குறு நாவல்...

குழந்தையின் செயல்பாடுகளை கதை மூலம் தெரிவித்துள்ள பாங்கு...அருமை.



மருத்துவரிடம் செல்லும் வழியில் அஸ்வின் என்ற பருவ வயதுள்ள ஆட்டிசக் குழந்தையைத் தவறவிட்டு விடுகின்றாள் வேலைக்காரி வள்ளி...அஸ்வினின் பெற்றோர் இருவரும் இவனுக்காக வேறு குழந்தைப் பெற்றுக்கொள்ளாமல் வாழ்கின்றனர் .இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் குழந்தையை வளர்க்க வள்ளியை வேலைக்கு அமர்த்துகின்றார்கள்...குழந்தை பிறந்த 4 வருடங்களில் அவன் ஆட்டிசக்குழந்தை எனத் தெரிந்த பின் தவித்து,தளர்ந்து,தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டு வாழும் சூழ்நிலையில் தான் தொலைந்து விடுகின்றான்...

கள்ளநோட்டு கும்பலைச்சேர்ந்தவன் என எண்ணி அக்குழந்தையை காவல் துறை படுத்தும் பாடும் அவனது நிலையை உணர்த்த இயலாமல் அக்குழந்தை படும் கொடுமைகளும் மனதைப்பிசைகின்றது....இறுதியாக அக்குழந்தை மனநிலை சரியில்லாதவனோ என்ற சந்தேகத்தில் மருத்துவரிடம் உறுதிப்படுத்த படுகின்றது.அதற்குள் அவன் கிழிந்த நாராகின்றான் காவலர்களால்..

குழந்தையை விசாரிக்கச் செல்லும் போது தான் அவனிடம் காணப்படும் முன்னேற்றத்தை மருத்துவர் வாயிலாக அறிந்து கொள்ளும் பெற்றோர் தங்களின் அண்மையை இழந்துஅக்குழந்தை பட்ட சிரமங்களையும் ,அவன் பாட்டுக்கேட்க கொடுத்த செல் அவனது உணர்வுகளை வெளிப்படுத்து கருவியாக உள்ளதையும் அறிந்து தங்களின் பொறுப்பற்ற தன்மையை உணர்ந்து வருந்துகின்றனர்...

ஒரு ஆட்டிசக்குழந்தை அளவற்ற ஆற்றலைத் தன்னுள் கொண்டவனாக இருப்பான் என்பதை கதையின் மூலம் உணர்த்திய பாங்கு அருமை..
மனதில் பதிந்து விட்டான் அஸ்வின்.....

5 comments:

  1. சிறப்பான விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
  2. ஆஹா! அவசியம் படிக்கவேண்டிய நூல் என உணர்த்துகிறதே தங்கள் நூல் அறிமுகம். படித்துப்பார்கிறேன் அக்கா !! பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. புத்தகத்தை படிக்க வேண்டும் முதலி./நீங்கள் விமர்சித்த விதமே புத்தகத்தை படிக்கத்தூண்டுகிறது/

    ReplyDelete
  4. அருமையானதொரு புத்தகப் பகிர்வு..
    நன்றிகள் பல சகோதரி...

    ReplyDelete
  5. நச் விமர்சனம்.... சீக்கிரம் வாங்கவேண்டும்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...