Thursday 14 August 2014

அவர் ஒரு பொது நலவாதி



காரைகாரர் என அழைக்கப்படும் அவரது குடும்பம்...

அவர்,தனது குடும்பம் மறந்து கதராடை உடுத்தி, நாட்டிற்காக போராடியவர்.....!

அவர் மனைவியோ ஆறு குழந்தைகளுக்கு உணவிட வழியின்றி தவித்து குடும்பத்தைக் காப்பாற்ற போராடினாள்....அவள் சேர்க்கும் சிறுவாட்டு காசு கூட சுதந்திரத்திற்காக கணவரால் பறித்து செல்லப்பட்டது....!

அவரின்  சுதந்திர முழக்கம் கேட்டு ஆசைப்பட்டு பலர் சுதந்திரப்போராட்டத்தில் இணைந்தனர்....அவர்களில் ஒருவர் தான் ஜி.கே.மூப்பனார்....தினமணி பொன்விழா மலரில் மூப்பனார் எழுதியக் கட்டுரைக்கூறும் உண்மை இது...!

அவரால் பலனடைந்தோர் பலர்....தனது உழைப்பு,சொத்து அனைத்தும் நாட்டுக்கே அர்ப்பணித்தவர்....

தன் குடும்பத்திற்காக பலன் ஏதும் பெற விழைந்தாரில்லை...
உண்மையான தியாகி ..... சென்னையில் உள்ள தியாகிகள் மண்டபத்தில் புகைப்படமாய்த் திகழ்கின்றார்...

அவர் ,கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுந்தரப்பெருமாள் கோவிலைச் சேர்ந்த தியாகி மாணிக்கமுதலியார்....
அவரது மனைவிபட்டம்மாள்....இவர்களின் மகள் சுசீலா, எனது அம்மா...
என் தாய்வழி தாத்தா...அவர்...
சுதந்திர தினத்தில் மகிழ்வுடன் நினைவு கூர்கிறேன்...செவிவழிக் கேட்ட என் தாத்தாவின் சுதந்திரப்போராட்ட அனுபவங்களை....

4 comments:

  1. வணக்கம்

    படைப்பு சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வாழ்வும் வளமும் வலிந்திறைத்தார் நாட்டிலுள்ள
    தாழ்வுநிலை போக்கத் துணிந்து !

    ReplyDelete
  3. தியாகியில் பெயர்த்தியா தாங்கள்
    கொடுத்து வைத்தவர்
    வாழ்த்துக்கள் சகோதரியாரே
    சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. உண்மையிலேயே சிலிர்கிறது வரலாறு!
    சரியான நேரத்தில் சரியான பதிவு அக்கா!
    பெருமையாக இருக்கிறது!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...