புதுகை பல்நோக்கு சமூக சேவை நிறுவனத்தினரால் நடத்தப்படும்
உண்டு உறைவிடப்பள்ளியில் ....
குழந்தைகளுடன் இருக்க விரும்பி மாலைப்பொழுதில் சென்றேன்...
அன்புடன் கண்களில் ஆர்வம் பொங்க வரவேற்றனர்..அறுபது குழந்தைகட்கு மேல் இருந்தனர்..
தூய்மையான வளாகம்...கட்டுப்பாட்டுடன் நடந்த குழந்தைகள் அங்குள்ள ஆசிரியரும் மற்றவர்களும் எங்களை கவனித்த விதம் அருமை...
பல்வேறு மனக்கவலைகளை தாங்கிய முகங்கள் கனிவுடன் என்
மனதில் அழுத்திய சுமைதனை புன்னகைப்பூக்களால் துடைத்தனர்.
பாடல்,கதை, நடனம் என ஆர்வமுடன் எங்களுடன் கலந்துரையாடினர்.
மனம் நிறைந்த நிகழ்வாக அன்றைய தினத்தை மாற்றினர்...
அம்மாவின் நினைவு நாளை அருமையாக திருப்தி தரும் வகையில் மகிழ்வோடு களித்தது வரவேற்கத் தகுந்தது.இச் செயல் தங்களின் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்துகிறது நன்றி தோழி.! தொடர வாழ்த்துக்கள் ....!
ReplyDelete