Wednesday 25 June 2014

என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக 27.06.14





வாழ்வில் சந்தித்த வேதனைகளைப் படிகல்லாக மாற்றி உள்ளேன் என்பதனை உணர்கின்றேன்.இதற்காக பல நல்ல உள்ளங்கள் என்னைக் கீழே விழுந்து விடாத படி எழ வைத்துள்ளன.இதற்கு நான் தகுதியானவளாக இனிதான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்கின்றேன்.

கவிஞர் பொன்னையா அவர்கள் கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த போது மிகவும் தயங்கினேன்.உங்களால் முடியும் என்றே என்னை ஊக்கப்படுத்தினார்.நிகழ்வில் கலந்து கொண்ட போது அனைவரும் மிகவும் நன்றாக வாசித்தீர்கள்மா என பாராட்டிய போது கூட என்னை ஊக்குவிக்கும் சொல் மலர்கள் என்றே எண்ணினேன்.

தென்றல் சமூக அறக்கட்டளை சார்பில் விழா எடுக்கிறார்கள் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்ற போதும் அழைப்பதால் போகலாம் என்று நினைத்தேன் ஆனால் நேற்று வந்த அழைப்பிதழை
நம்ப முடியாமல் இன்னும் பார்த்துக் கொண்டுள்ளேன்.
நான் வளர என்னை ஊக்கப்படுத்தும் நிகழ்வாகவே நாளை விழாவை என்ணுகின்றேன்..

9 comments:

  1. வணக்கம்

    உண்மைதான் இப்படியான நாள் வாழ்வில் மறக்க முடியாது.. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மகிழ்ச்சி கீதா, இன்னும் பல அங்கீகாரங்கள் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. உங்கள் பெயரில் உள்ள அமைப்பு...
    உங்கள் சாதனைக்கான அழைப்பு.
    சென்று வா.. கவியே சென்று வா - அறிவை
    வென்றுவா தோழி வென்று வா!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சகோதரி..
    www.malartharu.org

    ReplyDelete
  5. தென்றல் இனிமையாக தவழ வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. புரட்சித் தென்றல் விருது பெரும் சகோதரிக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. தென்றல் சமூகநல அறக்கட்டளையின் சார்பில், தென்றல் வலைப் பூ கவிக்கு விருது, அதுவும் புரட்சித் தென்றல் விருது.
    வாழ்த்துக்கள் சகோதரியாரே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...