Saturday 17 May 2014

னை,ணை



திடீர்னு என் மடிக்கணினிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல ...னை,ணை,லை,ளை றா ,ணா ,ன்னு தும்பிக்கை வச்ச எழுத்துக்களா வந்து என்ன பழைய காலத்துக்கு இட்டுக்கிட்டு போகுது..

எப்படி மாத்துறது?
இப்ப உள்ள குழந்தைகள் பார்த்தா நான் தமிழ் எழுத்துக்களில் மாற்றம் செஞ்சுருக்கேன்னு நினக்கத்தோணாது.!

இந்த லை  போட டீச்சர் கிட்ட என்னா மொத்து வாங்கிருக்கேன்னு நினசாலே கலங்குது.நல்ல வேளை இப்ப உள்ள குழந்தைகள் தப்பித்தார்கள்.பெரியாருக்கு தெரிஞ்சுருக்கு ..பாவம் அவரும் கஷ்டபட்டுருப்பாரு போல...
தும்பிக்கையெல்லாம் வளைச்சுட்டாரு...

இப்ப உள்ள எழுத்துக்களை எழுதவே இங்கீலீசு மீடியக் குழந்தைகள் எவன் டா இந்த தமிழ் மொழியக் கண்டுபிடிச்சான்னு திட்டிக்கிட்டே எழுதுதுங்க..
இதுல இந்த பழைய எழுத்துக்களப் பார்த்தா மயங்கியே விழுந்துடுங்களே

2 comments:

  1. வணக்கம்
    பதிவில் சொன்னது உண்மைதான் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. இப்ப குழந்தைகள் தமிழ்னாலே தடுமாறுதுங்க! தாய்மொழி வழிக்கல்வியை புறக்கணிப்பதே இதற்கு காரணம்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...