Thursday 29 May 2014

உலக சாதனை கவியரங்கம் 22.05.14-25.05.14

தமிழக கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தென்றல் சமூக அறக்கட்டளை இணைந்து நடத்திய உலக சாதனைக்கான தொடர்
கவியரங்கம்
22.05.14 முதல்-25.05.14 முடிய 77 மணி நேரம் தொடர்ச்சியாக கவிதை வாசித்து கின்னஸ் ரெக்கார்ட் பதிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது

400 கவிஞர்களுக்கு மேல்

4000கவிதைகளுக்கு மேல்

இடைவெளியின்றி தொடர்ச்சியான கவிதைகள் சரம் சரமாய் தொடுக்கப்பட்டன.

கவிதை வாசித்தவர்களுக்கு உடனுக்குடன் புத்தகமும்,சான்றிதழும் அளித்து பாராட்டினர்.

எனக்கு புதிய அனுபவம் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஏற்பாட்டாளர்களின் பங்கு பாராட்டுதற்குரியது.



நிறைய கவிஞர்களைப் பார்த்தது,நிறைய கவிதைகளைக் கேட்டது மனதிற்கு நிறைவான நிகழ்வு.

21 comments:

  1. வணக்கம்

    நிகழ்வு சிறப்பாக நடைபெற்றமைக்கு வாழ்த்துக்கள்
    எம் மொழிவளரட்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தவறாது வருகை புரிந்து ஊக்கப்படுத்துவதற்கு என் மனம் நிறைந்த நன்றி சார்.

      Delete
  2. தமிழக கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தென்றல் சமூக அறக்கட்டளையின் உலக சாதனைக் கவியரங்கம்
    வியப்பு மேலிடுகிறது சகோதரியாரே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நானும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்கின்றேன் .நன்றி சார்.

      Delete
  3. "//400 கவிஞர்களுக்கு மேல்//"

    "//4000கவிதைகளுக்கு மேல்//"

    வியக்க வைக்கின்ற நிகழ்ச்சி தான்.

    வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி சார்.

      Delete
  4. அருமையான சாதனை முயற்சி! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  5. வணக்கம் சகோதரி
    மகிழ்ச்சியான ஒரு விடயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். நிகழ்ச்சியை நேர்த்தியாக வடிவமைத்து சிறப்பாக முடித்துள்ள தமிழக கவிஞர் கலை இலக்கியச் சங்கத்திற்கும், தென்றல் சமூக அறக்கட்டளைக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும். தங்களின் படைப்பும் குரலும் யூடியூப் காணொலியாக வந்தமைக்கு வாழ்த்துகள் சகோதரி. தொடர்ந்து தமிழ்ப்பணியில் நடை போடுங்கள். நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நல்ல நிகழ்வு கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தற்கு மகிழ்கிறேன் சகோ.நன்றி

      Delete
  6. இது போலான் நிகழ்ச்சிகள் நம்மை செதுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் .மிக்க நன்றி சார்

      Delete
  7. உலகசாதனை படைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் ..
    புதுகை நகரில் செய்ய வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி சார்.

      Delete
  8. இந்த நிகழ்வை ஏன் நீங்கள் புதுகையில் முயற்சிக்க கூடாது சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. செய்யலாமே.முயற்சிக்கிறேன் சார்.

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...