Tuesday 8 April 2014


இன்றைய பெண் குழந்தையின் கதறலாய்...முடியாது தொடரும் வன்முறையின் வலியாய் மீள்பதிவு



அப்பான்னு நினச்சேன்
அசிங்கமாய்த் தொட்டான்
சகோதரன்னு பழகினேன்
சங்கடப்படுத்தினான்
மாமான்னு பேசினேன்
மட்டமாய் நடந்தான்
உறவுகள் அனைத்தும்
உறவாடவே அழைக்கின்றது...


பாதுகாப்பை நாடி
பள்ளிக்குச் சென்றேன்
ஆசிரியனும் அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்ணும்
குறையுமென்றான்...

நட்புக் கரமொன்று
நண்பனாய் தலைகோதி
தூங்கென்றான்
மரத்த மனம்
மருண்டு சுருண்டு
மயங்கித் தூங்கையில்
கைபேசியில் படமெடுத்தான்
அவனும் ஆண்தானே...

கதறி அழ
கடவுளைச் சரணடைந்தேன்
ஆறுதலாய் தொட்டுத்தடவி
ஆண்டவன் துணையென்றான்
சாமியாரும்...

அலறி அடித்து
ஓடுகின்றேன்
எங்கே போவேன்?
சமத்துவம் வந்ததென
சத்தமாய்க் கூவுகின்றார்

பெண்ணை
பெண்ணாய் பாராமல்
மனிதராய் பார்க்கும் நாள்
எந்நாளோ?
பாவிகளின் பாலியல் வன்முறை
எப்போது ஓயுமோ?

7 comments:

  1. Replies
    1. பெண்கள் தான் முழு வலியையும் உணர முடியும்

      Delete
  2. சரியான சவுக்கடி கவிதை!

    ReplyDelete
  3. வன்முறையின் வலிதாங்காமல் எங்கே போவது அருமைதோழி.

    ReplyDelete
    Replies
    1. வன்முறை அழிக்கும் சமுதாயத்தை உருவாக்குவோம்

      Delete
  4. எந்த எல்லை வரை ஓடுவது அடைக்கலம் தேடி இந் நிலையில்..
    யாரைத்தான் தான் நம்புவதோ பேதை
    நெஞ்சம் அம்மம்மா பூமியிலே யாவும் பஞ்சம்! என்பது தான் நினைவுக்கு வருகிறது.
    மிகவும் வேதனையாக இருக்கிறது. நன்றி வாழ்த்துக்கள் ...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...