Monday 31 March 2014

தெங்கின் கொடையாய்



சிதறிக்கிடக்கும் குரும்புகள்
தொப்பென்று விழும் நீர்க்குடுவை
சிறு பூச்சிகளின் உறைவிடம்
அணிலின் துள்ளோட்டம்
குருவிகளின் கீச்சொலிகள்
கூடுகளின் தளம்
கீற்றுகளில் ஒளிந்து விளையாடும்
கதிரவனும் நிலவும்
பாலையிலும் தண்மை
யாவும்

கலைந்து போன கனவுகளாயின

மதில் காக்க
தலையாலே தான் பருகிய
நீர் தந்த தெங்கு
தலைகொடுத்து நிற்கிறது
கண்களை குளமாக்கி.....!

2 comments:

  1. இங்கு எங்கு பார்த்தாலும் இப்படித் தான் இருக்கிறது...

    அடுத்த மாதம் அடிக்கிற வெயிலுக்கு பற்றி எரியும் போல...

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி
    எங்கு காணினும் இந்த அவலம் தான். மனிதனின் சுயநலத்தால் இயற்கையும் இன்னலுக்கு ஆளாகியுள்ளது வேதனை தான். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...