அந்தி வான் சிவக்க
அல்லில் விளக்கேற்றி
வெட்கத்தில்சிவந்தாள்
கதிரவக்கணவனுடன்
நிலவுத்தாய்...
பகல் முழுதும்
பணி முடித்த அசதியில்
பகலவன் ஓய்வெடுக்க
பறவைகள் கீதமிசைக்க
தென்றல் கவரி வீச
தகதகத்த மனைவியை
தாபத்துடன் தழுவி
கலந்தே மகிழ்ந்தான்...
பூமிக்குழந்தைகளின்
பூவிழி வருடி
தாலாட்டி துயில வைக்க
நிலவுத்தாய் விரைந்திட்டாள்...
கலவி ஆசை தீராத
மோகத்தில் கதிரவனோ
கங்குலில் வருவேனென்க....
குழந்தைகள் துயிலட்டும்
வைகறை கலந்திடலாமென்றே
பாவையவள் பார்வையால்
கெஞ்சிட...
எப்போதும் குழந்தைகள் தானா?
எனை எண்ணி பார்ப்பதெப்போ?
என்றே அடம் பிடிக்க....
கங்குலோ கதிரவனை
தடை செய்ய..
வைகறையும் விரைந்துவர
கொண்டவன் மகிழவே
கோதையவள் தவித்திட்டாள்....
தமிழ் நாட்டு பெண்போல
நிலவுத்தாய் படும் பாடு
அப்பப்பா....
அருமை சகோதரியாரே
ReplyDeleteநன்றி சார்
Deleteரசித்துக் கொண்டே... முடிவில் உண்மை...!
ReplyDeleteநன்றிசார்
Deleteநல்ல கவிதை...
ReplyDeleteஆஹா அருமையான கற்பனை ரசித்தேன் தோழி வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteரசனை மிக்க வரிகள்! சிறப்பானகற்பனை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅடடா!
Deleteபகல் முழுதும் -பணி செய்த பகலவனும் கங்குலில் வருவானென காத்திருந்தாளோ...?பூமித்தாய் அருமை.தோழி,