Tuesday, 7 January 2014

பொங்கல் வழிபாடு

இன்றுஎன் வகுப்பு மனம் நிறைந்த வகுப்பாய் கொண்டாட்டங்களுடன் அமைந்தது.ஆரவாரத்திற்கும் பஞ்சமில்லை .இப்படி என் மாணவிகள் வகுப்பில் இருந்து நான் பார்த்ததே இல்லை.ஒவ்வொரு நாளும் எனக்கு கற்றுக்  கொடுக்கிறார்கள் குழந்தைகள் . புத்தாண்டில் எப்படி
மாணவிகளை கற்பித்தலில் முழுமையாக ஈடுபடுத்துவது என்ற எண்ணத்தின் விளைவாய் இன்றைய வகுப்பு ...என்ன சொல்ல வர்றேன்னு புரியல தானே ....
ஏழாம் வகுப்பு தமிழ் பாடம் செய்யுள்.
.
பொங்கல் வழிபாடு
நானே பேசி போரடித்த வகுப்பினை குழந்தைகள் கையில் ஒப்படைத்து விட்டேன் .இனி நீங்கதான் டீச்சர் .நீங்கதான் பாடம் எடுக்கனும்னு சொல்லிட்டேன் .கரடியா செயல்பாடுகளுக்காக கத்தினாலும் சில குழந்தைகளுடன் போராட்டமே நடத்த வேண்டியிருக்கும்.ஆனால் இன்று படிக்கத்தெரியாத மாணவி கூட படித்தாள் என்றால் வேறு என்ன வேண்டும் எனக்கு .அழகாக செய்யுளைப் பாடியதுடன் பொங்கல் விழாவே கொண்டாடி விட்டனர் .வகுப்பில் நுழைந்த எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியல .மூன்று செங்கல் வைத்து இரண்டு அடுப்பு அதில் சக்கரைப் பொங்கல் ,எரியாத அடுப்பில் கலையம் நிறைய சக்கரைப் பொங்கல்..!




விறகு எரியாமல் எப்படி என்ற என் கேள்விக்கு  விடையாக வீ ட்டிலேயே செய்து எடுத்து வந்து விட்டனராம்  .அது மட்டுமின்றி மேசையில் சாமி படமொன்று வைத்து (சூரியனாம் )பழம், பூ வைத்து சாம்பிராணி, ஊதுபத்தி ஏற்றி வைத்து வகுப்பே மணக்க வைத்து சூடம் ஏற்றி கொண்டாடி, தற்செயலாக வந்த தலைமை ஆசிரியர் மற்றும் வட்டாரவள மைய பயிற்றுனர் அனைவருக்கும் பொங்கல் கொடுத்து என குட்டிப்  பொங்கல் விழாவே நடத்தி வகுப்பிற்கு வந்திருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டனர்
.ந .பிச்சமூர்த்தியின் பொங்கல் வழிபாட்டு பாடலை ராகத்துடன் பாடி ,அதன் விரிந்த பொருள் கூறி .அருஞ்சொற்பொருளுக்கு விளக்கம் கூறி அசத்தி விட்டனர் .மலைத்து போனேன் .எத்தனை மகிழ்வு மாணவிகள் முகங்களில் .
இப்படியே அறிவியல் வகுப்பும்....என் பங்காய் 

என் குழந்தைகளுடன் ....




வழி காட்டியது, அவ்வவ்போது விளக்கியதுடன் இன்றைய வகுப்பு கலகலன்னு .....
அவர்கள் வாழ்வில் இந்த பொங்கல் நீங்கா இடம் பெற்று விட்டது ..
வேறு என்ன வேண்டும் எனக்கு..?

12 comments:

  1. மிக மிக தித்திப்பான வகுப்பு! அருமை!!

    ReplyDelete
    Replies
    1. நலமா தோழி ?நீண்ட நாட்களாயிற்று. பாசமான குழந்தைகள்.நன்றிம்மா

      Delete
  2. வகுப்பிலேயே மாணவிகள் பொங்கலை கொண்டாடியது, தங்களுக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருக்கும். இதனை படிக்கும் எங்களுக்கு வித்தியாசமாகவும், ஆச்சிரியமாகவும் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. என்னாலயே நம்ப முடியல சார்.நன்றி

      Delete
  3. ஆகா...! மிக்க மகிழ்ச்சி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பொங்கல் வாழ்த்துக்கள் சார்.நன்றி சார்

      Delete
  4. நிறைவான பதிவு டீச்சர், இனிய பொங்கல் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான பதிவும் கூட .நன்றி

      Delete
  5. வாழ்த்துக்கள் டீச்சர்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்.பொங்கல் வாழ்த்துக்கள்

      Delete
  6. உங்கள் வகுப்பில் (போன பதிவிலும்) என்னிடம் படித்த கண்மணிகளும் இருகிறார்கள்.மாணவிகளை இப்படி பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது ,பொங்கல் வாழ்த்துக்கள் டீச்சர்

    ReplyDelete
    Replies
    1. ஓ உங்கள் பயிற்சியா...மிக அருமையான குழந்தைகள்.வாழ்த்துக்கள்மா

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...