பசுமை போர்வையை
கிழித்து நுழைந்தது
மரவட்டையென ...
இயற்கையை இதயத்தில்
தேக்கி கண்களை
நிறைக்க ...
அகத்தின்கண்
தேதி மாறிய பயணச்சீட்டு
தடைசெய்து பாதியில்
இறக்கிவிட்டது
பழுத்த இலையொன்றை ...
ஊதுபத்தி விற்று
உழைப்பை நேசிப்பவனாய்
ஊனக்கண் இழந்த
ஞானக்கண் தோழன் ...
சரசரவென குட்டிக்கரணம்
சட்டென்று அடித்தது
கழைக்கூத்தாடும் குழந்தையொன்று
தட்டைநீட்டி கையேந்தி
தவிக்கவிட்டது மனதை ..
அரசியல் அரட்டை ,
குடும்பச்சண்டை, ஊழல்,
கொலை, கொள்ளையென
கதம்பமென சொல் தோரணம் ...!
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
கருத்தரிப்பும் பிரசவமும்
கணக்கின்றி ....
பயணத்தின் எச்சங்களாய் ..
கசங்கிய செய்தித்தாள் ,
காலியாய் உருண்டோடிய
நெகிழி உருளை ,
குடித்த குவளையுடன் ,
காற்றில் நிறைந்த
சொல்தோரணங்கள்
மிச்சமென ....!
//தட்டைநீட்டி கையேந்தி
ReplyDeleteதவிக்கவிட்டது மனதை ..//
படித்த எங்களின் மனமும் தவித்துத்தான் போனது
பயணப்படும் வரிகள் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...