வெற்றுத்தாளா நீ?
வெறுமை அல்ல நீ
உலகே உன் பின்னே...!
சான்றிதழாய்,ஊதியமாய்
கரங்களில் தவழ்கின்றாய்..
கர்வமுடன் கனைக்கின்றாய்
எனை நோக்கியே உலகென்று..!
யார் நீ?
அமெரிக்காவின் அதிகாரமா?
க்யூபாவின் தன்மானமா?
அரபு நாடுகளின் கச்சா எண்ணெயா..?
ஆப்பிரிக்காவின் அடிமை வாழ்வா?
சிங்களரின் சித்ரவதையா?
ஈழத்தமிழரின் கண்ணீரா?
இரக்கமின்றி வதைக்கின்றாயே..!
உலகத்தை உனக்காக உலுக்கி
அரசியல் சாட்டையால் சொடுக்கி
மனிதம் மறக்கச் செய்து
மக்களை உன் பின்னே
உழன்றோடச் செய்கின்றாயே..!
உனையறியா உயிர்கள்
தரணியில் அமைதியாய் வாழ..
உனைநினைந்த மானுடத்தின்
மனிதநேயம் மறக்கச் செய்யும்
வெற்றுத்தாளா-நீ
வெறுமையல்ல நீ
உலகே உன்பின்னே...!
வெறுமை அல்ல நீ
உலகே உன் பின்னே...!
சான்றிதழாய்,ஊதியமாய்
கரங்களில் தவழ்கின்றாய்..
கர்வமுடன் கனைக்கின்றாய்
எனை நோக்கியே உலகென்று..!
யார் நீ?
அமெரிக்காவின் அதிகாரமா?
க்யூபாவின் தன்மானமா?
அரபு நாடுகளின் கச்சா எண்ணெயா..?
ஆப்பிரிக்காவின் அடிமை வாழ்வா?
சிங்களரின் சித்ரவதையா?
ஈழத்தமிழரின் கண்ணீரா?
இரக்கமின்றி வதைக்கின்றாயே..!
உலகத்தை உனக்காக உலுக்கி
அரசியல் சாட்டையால் சொடுக்கி
மனிதம் மறக்கச் செய்து
மக்களை உன் பின்னே
உழன்றோடச் செய்கின்றாயே..!
உனையறியா உயிர்கள்
தரணியில் அமைதியாய் வாழ..
உனைநினைந்த மானுடத்தின்
மனிதநேயம் மறக்கச் செய்யும்
வெற்றுத்தாளா-நீ
வெறுமையல்ல நீ
உலகே உன்பின்னே...!
ஆஹா என்னே கற்பனை உண்மை தான் அருமை
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்.....!
வீதியிலே வீணாகும் வெற்றுத்தாள் என்றாலும்
ReplyDeleteபாதியிலே எம்முயிரை பந்தாடும் -ஆதியிலே
ஆண்டவனும் காணாத அற்புதமாய் இத்தாள்கள்
மாண்டுவிட வைக்கும் மருந்து !
அத்தனையும் உண்மை அழகிய வலிநிறைந்த கவிதை
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
படங்களோடு பார்க்கும்போது இன்னும் சிறப்பாகத் தெரிகிறது.
ReplyDelete“காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான் இந்தப் பாரிடைத் துயில்வோர் நெஞ்சில் பாய்ந்திடும் எழுச்சி நீதான்” என்ற பாரதிதாசன் சொன்னதும் நினைவிலாடுகிறது. ஆனால், தாளின் பயனே வெகுவாகக் குறைந்து, எல்லாம் வலைவெளி (ஆன்லைன்) பதிவாகவே ஆகிவருவதைக் கவனித்தீர்களா கவிஞரே, “இதுவும் கடந்து போகும்”..நல்ல கவிதைக்கு நன்றி