Tuesday, 10 December 2013

பெண்ணியவாதி

பெண் என பெருமை படவா?வேதனை படவா?இப்படி எழுத தூண்டிய சமூக அவலத்தை என்ன செய்ய?



பெண்ணியவாதி
எரிச்சலும் நக்கலுமாய்
பட்டமெனக்கு..



தன் துயர் தாங்கி
உயிர் தரும்
பெண்ணினம் படும்
பாடுகளைப் பட்டியலிட்டதாலா..?

பெண்சிசுக்கொலை
பெண் குழந்தையே
தொட்டில் குழந்தையாய்..!

ஆறு வயது சிறுமி முதல்
அறுபது வயது பாட்டி வரை
வயது விலக்கின்றி
பாலியல் வன்முறை...!
ஓயவில்லை எதுவும்..!

”இரவில் மட்டுமல்ல
மகாத்மா
பகலிலும் முடியவில்லை 
தனியே நடக்க..!”

கடவுள் இருந்தால்
கேட்கும் வரம்....

உலகு வளர
நீ தந்த உறுப்புகளே
என் இனம் ....
சிலுவையும் வேதனையும்
ஏற்க காரணம். வேண்டாம்
எங்கட்கு அவை...



12 comments:

  1. உலகு வளர
    நீ தந்த உறுப்புகளே
    என் இனம் ....
    சிலுவையும் வேதனையும்
    ஏற்க காரணம். வேண்டாம்
    எங்கட்கு அவை...
    முகத்தில் அறையும் நிஜம்
    உள்ளம் சுடும் நிஜம்

    ReplyDelete
  2. சகோதரிக்கு வணக்கம்
    எரி மலையிலிருந்து வெளிப்பட்ட தீப்பிழம்பாய் தெரிக்கிறது வார்த்தைகள். படிக்கும் போதும் படித்து முடித்த போதும் கவலையை மனம் சுமந்து நிற்பதை உணர்கிறேன். சக இனத்திடமிருந்தே (மனித இனம்) பெண்ணினம் பாதுகாக்க வேண்டிய அவலம் நமக்கு வந்துள்ளது. இனி வரும் தலைமுறையை நல்லதாக அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம். நிச்சயம் என்னால் முடிந்த வரை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பெண்களைப் பற்றிய ஆரோக்கியமான பார்வையைக் காண மனநிலையில் மாற்றத்தை விதைப்பேன். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ .ஆண்களும் பெண்களும் கூட மாற வேண்டும்.வருங்கால சந்ததி பெண்களை சக மனுஷியாய் மதிக்கும் நிலை வேண்டும்.

      Delete
  3. உள்ளத்தைச் சுடும் வரிகள்

    ReplyDelete
  4. நெஞ்சம் கனக்க வேதனையில் வடிந்த வரிகள் விடியாதா என்று நன்று தொடர வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. விடியும் மன உறுதியுடன் பெண் குழந்தைகளைவளர்ப்போம்

      Delete
  5. உள்ளதைச் சொன்னால் இன்று சமூகத்தால் கிடைக்கும் பட்டம்
    இதுதான் என்பது நிதர்சனமே.
    என்று மாறும் இவ்வுலகம்.....

    ReplyDelete
  6. தகிக்கும் வரிகள்...

    உண்மை...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...