Wednesday, 20 November 2013

கொத்தடிமைகள்



கல்லிலே கலைவண்ணம்
கண்டான் தமிழன்...
கல்லில் கரைகின்றனர்
கொத்தடிமைகள்..


குவாரியில் குழந்தைகள்
விளையாட்டு பொம்மைகளாய்
கல்லும் சுத்தியலும்...

கல்லோடு கல்லாய்
கருகிய மனங்களாய்
கருவிலே தூண்களானோம்
கல்தான் வாழ்க்கை 
கல்வி எங்கட்கேது..?

கல்வியில்லை களிப்பில்லை
நாங்கள்தான் ...
வருங்காலத்தூண்கள்
என்றது இதைத்தானோ...?

12 comments:

  1. இந்தக் கொடுமை என்று தீருமோ....?

    ReplyDelete
    Replies
    1. மனம் மறந்த பணம் பெரிதான வாழ்வில் ...கொடுமைகள் தொடர்ச்சியாய்...

      Delete
  2. சமூகத்தின் பார்வை இவர்கள் மீது பட்டால் மாற்றம் வரலாம்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நம்புவோம்

      Delete
  3. Simple words with great meaning!

    ReplyDelete
  4. மனதை நெகிழ்திய கவிவரிகள்...

    ReplyDelete
    Replies
    1. குறும்படம் ஒன்று” கல்மனிதர்கள்” பார்த்தேன் அதிலிருந்து மீள வெகு நாட்களாயிற்று

      Delete
  5. மனதைப் பிசைகிறது...அவர்களுக்கு விடிவுவர என்ன வழி???

    ReplyDelete
    Replies
    1. முதலாளிகள் மனம் வைத்தால் விடிவு கிடைக்கும் முடியுமா?

      Delete
  6. சகோதரிக்கு வணக்கம்..
    கொடுமை தான் சகோதரி. கொடுமையை கவிதையில் கொண்டு வந்தது அருமை. காட்சிகளும் காலங்களும் மாற வேண்டும் அவர்களும் சிற்பங்களாய் ஜொலிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும். பகிர்வுக்கு நன்றீங்க.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...