Monday, 14 October 2013

எப்படி தள்ள?

சாதி,மதம் பாராத
சான்றாளன்.

ஏழை,பணக்காரன்
வேறுபாடு காட்டாத
மார்க்ஸின் தோழன்

யாதும் ஊரே
யாவரும் கேளீர்
இவனுக்கே பொருந்தும்

வேனிற்கால பகைவன்
மழைக்காலத் தோழன்.

எப்போதும் ஒரே
இசையையே முணுமுணுப்பான்..
ம்ம்ம் மென...

என் அனுமதியின்றி
என்னை சுவைப்பவன்..

பழச்சாறு மறுத்து
மனிதச் சாறையே
உறிஞ்சுபவனை..


 எப்படி தள்ள?

7 comments:

  1. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமை. வாழ்த்துக்கள். தங்கள் தளத்தில் இணைந்து விட்டேன்.இனி தொடர்வேன்

    ReplyDelete
  3. நன்றி சார்.

    ReplyDelete
  4. கவிதை நல்லா இருக்கு. ஓ என்றி பாணியிலான -கடைசிவரியில் திருப்பம்தரும்- சிறுகதைக் கவிதை. ஆனால், கீழிருந்து மேலாக5,6ஆம் வரிகளை இன்னும் கவனமாக எழுதியிருக்கலாம்- அதுவும் கொசுவை ஆண்என்று சொல்லிவிட்டதால். எனினும் தொடர்ந்து எழுதுங்கள் எழுத எழுத பேனாவுக்கே ஒரு “எடிட்டிங் பவர்“ வந்துரும். வாழ்த்துகள்

    ReplyDelete
  5. நன்றி சார்

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...