ஏன் அம்மா
நாம்வெடித்து மகிழ்வதெப்போ..?
அடுத்த ஆண்டு காசுவரும்
ஆசையா நீ கேட்ட வெடிகளை
கட்டாயம் வாங்கிடலாம் என்றாள்
மத்தாப்பூ குச்சிகளை பெட்டியில்
வச்சுகிட்டேகேட்டாள்..தங்கச்சி
எனக்கும் நிறைய மத்தாப்பூவென..
இயலாத புன்சிரிப்பில் தங்கமே
தவறாமல் வாங்குவோம் என்றாள்..
வெடி மருந்தை அடுக்கிக் கொண்டே
கிழிந்த முந்தானையால் முகம் துடைக்க
எத்தனித்த வேளையிலே...
பட்டாசுடன் பட்டாசாய்
என் அம்மாவும்வெடித்துசிதறினாளே..
கையில் தீயுடன் தங்கையும்
காலில் நெருப்புடன் நானும்
தூக்கி எறியப்பட்டோமே..
வெடித்த வான்வெடியில்
என் அம்மாவின் சதைத்துண்டுகள்
வானத்தில் பூப்பூவாய் தெறித்து
அன்பு மகனே ..ஆசையா நீ கேட்ட
வானவெடியெ பார்த்துக்கோ என்றது
எஞ்சோட்டு சிறார்களே
எங்களையும் நினைப்பீரோ நீங்க வெடிக்கும் வெடியில்
எங்களின் சதைத்துண்டுகள் கலந்திருக்கும்..
அதன் வடிவில் நாங்க நீங்க
வெடிப்பதை பார்த்து மகிழ்வோம்..அப்போது
நாம் சிரிக்கும் நாளே திருநாள்
அருமை... கவிதையை (இணைப்பை) நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்... கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி...
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
நன்றி.சார்.
Deleteமனதை உலுக்கிய சம்பவங்களை
ReplyDeleteஉரைத்த உணர்வுக்கவிதை....
போட்டியில் வெறிபெற வாழ்த்துக்கள்!
தோழமைக்கு நன்றி
Deleteஐயோ...பட்டாசே வேண்டாமப்பா...பட்டாசுத் தொழிற்சாலை நேரில் பார்த்து வந்த என் தோழி சொல்லியதெல்லாம் கண்ணில் நீர் வரவழைத்தன...உங்கள் கவிதையும்!
ReplyDeleteஉண்மை நிலைமை சொல்லிய கவிதை அருமை!
உண்மை கவிதை எழுதிவிட்டேன்.அதிலிருந்து இன்னும் மீள முடியவில்லை.
Deleteஉண்மையை உரக்கச் சொல்லும் உன்னதக் கவிதையை படைத்தமைக்கு நன்றிகள் சகோதரி. மனதை கனக்க வைத்தது கவிவரிகள். படத்தேர்வும் கவியோடு சேர்ந்து உலுக்குகிறது. பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteநன்றி உடனுக்குடன் வரும், உங்கள் விமர்சனம் மேலும் எழுதத்தூண்டுகிறது .நன்றி சார்.
Deleteபட்டாசுத் தொழிற்சாலை விபத்துகள் எப்பவும் நமது மனதை அடியோடு அசைக்கும். அந்த தீர்க்க முடியாத சோகத்தை கவிதையில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி .தொடர்ந்து உங்களின் வாழ்த்துக்களை விரும்புகிறேன்மா
Deleteமனதை உலுக்கியச் சம்பவங்கள்
ReplyDeleteஇதயம் கனக்கிறது
சொல்ல முடியா வேதனை சார்
Deleteமற்றவர் வாட நாம் வாழ்வா தீபாவளி என நறுக்கென கேட்கிறது கவிதை .போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி!
ReplyDeleteநன்றிம்மா
Deleteமிக்க நன்றி சார்
ReplyDeleteமற்றவர்களை மகிழ்விக்கும் பட்டாசுகள் தொழிலாளர்களின் மீளாத்துயரிலும் கண்ணீரிலும் ஆனது என்று நினைக்கும்போது மனம் வேதனைகொள்கிறது போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சார்.
Deleteஉணர்ச்சிப் பிழம்பாய் உருவான ஓவியக் கவிதை-- நன்று தோழி.
ReplyDeleteநன்றி அய்யா
Delete