Monday, 28 October 2013

நள்ளிரவில் கேட்கும் அழுகுரல்

சுனாமி சுருட்டிய
உயிர்களின் ஓலமாய்
அலையோசை...

சொந்தங்களைத் தேடி
கரைதனில் நாடி
ஆர்ப்பரிக்கும்
ஆழி அலை..

உலகின் கண்ணீர் துளி
ஈழம்

பூஞ்சோலை சிறார்களைப்
பாதுகாக்க ஏலாமல்
பாடையாய் போனோமே என
பதுங்கு குழியின்
விம்முகின்ற ஓசை..

உறவிழந்து ,உறுப்பிழந்து
உணர்விழந்து.உயிரிழந்த
தமிழினத்தின்
குருதி படிந்து
மறுகித் துடிக்கும்
ஈழ மண்ணின்
மெளன அழுகுரல்....

அலைகளின் ஓசையில்
அமிழ்ந்தே ஒலித்திடும்
நள்ளிரவில் கேட்கும்
அழுகுரலாய்..

9 comments:

  1. Replies
    1. இன்னும் எத்தனை நாளைக்கு ?

      Delete
  2. ///பூஞ்சோலை சிறார்களைப்
    பாதுகாக்க ஏலாமல்
    பாடையாய் போனோமே என
    பதுங்கு குழியின்
    விம்முகின்ற ஓசை..////
    அருமை சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. உணர்வின் வலி அது. நன்றி சார்

      Delete
  3. உடமையிழந்த, உறுப்பிழந்த நம் சொந்தங்கள் நம்மிக்கையை மட்டும் இன்னும் இழக்கவில்லை. அவர்களுக்கும் புது விடியல் உதயமாகும் எனும் நம்பிக்கை நமக்கும் உண்டு. சோக கீதத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் சகோதரி..

    ReplyDelete
  4. அழுகுரல்கள் அடிவயிற்றில் வலியைத் தந்தது...

    நானும் இன்னும் அந்த உணர்வுகளிலிருந்து மீளவில்லை...

    ReplyDelete
    Replies
    1. அனுபவித்தவர்களின் சோகம் சொல்ல முடியாத ஒன்று.நன்றி

      Delete
  5. அழுகுரல் கேளாச் செவியர்களாயும்
    விழுமுடல் காணாக் குருடர்களாயும்
    எழுத்தில் மட்டும் ஏகாந்திருக்கும்
    இந்திய ஊனங்கள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...