பத்தொன்பதாம் நூற்றாண்டு
Pathombatham noottandu 2022malayalam film
Prime video
கேரள மாகாணத்தில் தாழ்த்தப்பட்டவர்களை நம்பூதிரிகள் சாஸ்திரம் எனக் கூறி செய்த கொடுமைகளை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்.
19 ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் ஈழவ குடும்பத்தில் பிறந்து மகாவீரனாக வாழ்ந்த ஆராட்டுபுழா வேலாயுத பணிக்கரின் வீரத்தை போராட்டங்களை ,ஈழவக்குடும்பத்தில் பிறந்த முலைவரி கட்ட மறுத்த வீராங்கனை நங்கேலியின் தீரத்தை ,உயர்சாதியினர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைத்த வன்மத்தை அக்கிரமங்களை கண்முன் காட்டும் வலியின் உச்சம்.
மார்பைமறைக்க பெண்கள் படும் துயரங்களை ஆங்கிலேயர்களுடன் இணைந்து அவர்களுக்கு செய்த துரோகங்களை காட்சிப்படுத்தி உண்மையை முகத்தில் அறைந்து நாம் வந்த வரலாற்றைக் காட்டும் திரைப்படம் இக்கால இளைஞர்கள் கட்டாயம் காண வேண்டிய படங்களில் ஒன்று.
வேலாயுத பணிக்கராக வாழ்ந்துள்ள சிஜுவில்சன்,நங்கேலியின் வீரத்தை உணர்த்திய காயாடு லோகரை மனதார பாராட்ட வேண்டும்.
கற்பனையை வரலாறாக்கி பணம் கொழிக்கும் திரைத்துறையில் உண்மை வரலாற்றை உலகுக்கு எடுத்துக்காட்டிய இயக்குநர் வினையனுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் பார்க்க வேண்டிய படம்.
மலையாளத்திரைப்படங்கள் உண்மைக்கு அணுக்கமாக உள்ளதும் தமிழ்த் திரைப்படங்கள் இன்னமும் நாயக் பிம்பத்தினை வைத்தே பிழைப்பு நடத்துவதும் முரண்களின் உச்சம்.
No comments:
Post a Comment
தங்களின் இனிய வருகைக்கு நன்றி...