Thursday, 1 October 2020

மனிதம்

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் பொறியியல் அறிஞர் சங்க இலக்கியம் பாடும் கவிஞர் இவர்... இவருக்கு உற்ற இணையராக சகோதரர் திருமிகு வினோத்.
கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாலும் இன்னும் இன்னும் என ஓடும் சமூகத்தில் இவர்கள் வித்தியாசமானவர்கள்..
தங்களின் ஊதியத்தில்‌ ஒரு பகுதியை எளிய மாணவர்களின் கல்விக்காக செலவிடும் நல்ல உள்ளங்கள்..
புதுக்கோட்டை மகளாய் எங்கள் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் தோழி இருப்பது வாழ்வின் வரம்.
கல்விக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து 5 கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை தருவதாக பொறுப்பேற்று ரூ 50,000 அனுப்பி உள்ளார்.
திகைப்பில் மனம் நெகிழ்கிறது.இவரது மகன் படிக்கும் பள்ளியில் கல்வியில் ஒரு பகுதியாக சர்வீஸ் செய்து சான்று காட்ட வேண்டும் .
தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கி எப்படி சேவை செய்து பணம் திரட்டி இந்திய மாணவர்களின் கல்வி உதவுவது என்று திட்டமிட்டு உள்ளார்.எப்படி பணம் கிடைக்கும் என்று கேட்டேன்... அங்கு வீட்டு வேலைகளில் பிள்ளைகள் உதவி செய்தால் பணம் தர வேண்டுமாம்.இங்கு பணம் தரேன்னாலும் செய்ய மாட்டார்கள் தானே.மேலும் அருகில் உள்ள வீடுகளில் அவர்களுக்கு உதவிகள் செய்து பணம் திரட்டலாமாம் என்று கூறியதாக தோழி கூறிய போது கண்களில் நீர் நிறைந்தது.
எடுத்துக்காட்டாக வாழும் பெற்றோர்களின் பிள்ளைகள் வேறு எப்படி இருப்பார்கள்..
எங்கள் பள்ளியில் படித்து தற்போது கல்லூரியில் படிக்கும் இருமாணவிகளுக்கு தலா ரூ 5000 என ரூ 10000  நேற்று பள்ளி தலைமையாசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.. தலைமைஆசிரியர் உள்பட அனைவரும் மகிழ்ந்து பாராட்டிய போது நல்ல தோழமைகளை உறவாகப் பெற்ற நிறைவு.
ஆசிரியர் Antony Pudugai  அவர்கள் மூலமாக‌ வல்லத்திராக்கோட்டையில் படிக்கும் 4 மாணவர்களுக்கு ரூ40,000 கல்விக்கட்டணமாக தர உள்ளோம்.
பணம் எவ்வளவு வரலாம் ஆனால் மனம் ஒரு சிலருக்கே வாய்க்கும்‌...
இதற்கு முன்பும் நிறைய பள்ளிகளுக்கு நண்பர்களுடன் இணைந்து உதவிகள் செய்து உள்ளார்கள்.அவர்களுக்கு‌ நன்றி கூறப்போவதில்லை வாழ்வில் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.. அவர்கள் உயர்ந்தால் மேலும் பல மாணவர்கள் வாழ்வில் கல்வி ஒளியேற்றுவார்கள்.

2 comments:

  1. உயர்ந்த மனங்களின் சங்கமம் வாழ்க நீவீர் பல்லாண்டு.

    உதவுவதற்கு முதலில் வேண்டியது மனமே... மனமிருந்தால் பணம் தானாக வரும்.

    ReplyDelete
  2. சிறப்பான செயலைச் செய்த சகோ கிரேஸ் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...