Sunday, 9 August 2020

தேநீர்

அதிகாலைத் தேநீர் அமிர்தமாய் இருக்கிறதா?
அழிந்த உயிர்களின் அரிதான குருதிச்சுவையது.
உயர்ந்து நின்ற காடழித்து
உயிர்களை குடித்தமைத்த  
தேயிலை படுக்கை
வனச்சுடுகாடு.
நாம் பச்சை படுக்கை என
வியந்து அருகில் விதவிதமாக
விழிவிரிய எடுத்தபுகைப்படங்களின்
பின்னணியில் ஒரு இரத்த வரலாறு.
சேற்றில் புதைந்த உயிர்களின் ஓலம்..
தாயே தனது குழந்தைகளை விழுங்கிய சோகம்...
நீங்கள் குடியுங்கள் ரசித்து...
கீதா

6 comments:

  1. Replies
    1. உண்மை தான் சார்

      Delete
  2. அருமையான சிந்தனை, கண்ணீருடன்.

    ReplyDelete
  3. நாம் அன்றாடம் அருந்தும் தேநீருக்குள் இத்தனை சோக கண்ணீரும் ரத்த வியர்வையும் இருப்பது அறிந்து வருத்தப்படுகிறேன். உயிர் நீத்த அத்தனை ஆன்மாக்களும் இறைவனின் மடியில் இவளைப்பாற வேண்டுகிறேன்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...