Monday, 6 July 2020

கண்ணீர்

ஒரு நிமிட மகிழ்ச்சி
ஒரு உயிரின் வீழ்ச்சி...

பாலியல் வன்முறைக்கு பின்
பக்குவமாய்
கழுத்தை நெரித்து
முடிந்தால் அறுத்து
சாலையில் வீசி
தூக்கிட்டு
 மூச்சைடைக்க வைத்து
ஆசையிருந்தால் உடல் முழுதும்
கத்தியால் கோலமிட்டு
கதறுவதை ரசித்து
நெருப்பிலிட்டு எரித்து
ஒரு நிமிட மகிழ்வை 
மறந்து விடலாம்...
பள்ளி இருந்தால் 
எம் குழந்தைகளுக்கு
பாதுகாப்பு தான்.
கொரோனா தேவலாம்
கீழ்மையான ஆண்களுக்கு...
தினம் தினம் பலி
நேற்று அறந்தாங்கி
இன்று திருச்சி குழந்தை...

2 comments:

  1. வேதனை மட்டுமே மிஞ்சுகிறது. மனிதப் போர்வையிலிருக்கும் கீழ்த்தரமான எத்தனை எத்தனை கொடியவர்கள் நம்மிடையே....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...