Friday, 19 January 2018

சனவரி 2018 மாத வீதி கூட்டம்

இம்மாத வீதி அமைப்பாளராக கவிஞர் வைகறையின் மனைவி ரோஸ்லின்....
இரண்டு வருடங்களுக்கு முன் பேரிழப்பாய் வைகறையை புதுக்கோட்டை இழந்தது.

அரசின் உதவி தொகை எதுவும் கிடைக்காது என்ற நிலையில் வைகறையின் மனைவி ரோஸ்லின் மற்றும் மகனை பாதுகாக்கும் முயற்சியில்.... வலைப்பதிவு நண்பர்கள், முகநூல் நண்பர்கள் மற்றும் அனைவரின் உதவியில்  நிதி திரட்டி வீதி நிறுவனர் முனைவர் அருள்முருகன் அய்யா அவர்கள் தலைமையில் வழங்கினோம்.
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் தங்கள் பள்ளியில் ரோஸ்லினுக்கு ஆசிரியப் பணி வழங்கி அவரின் வாழ்விற்கான தன்னம்பிக்கையை அளித்தது மறக்க முடியாத உதவி.
அரசு பணி வாங்குவதற்கான முயற்சிகளில் கவிஞர் முத்துநிலவன் மற்றும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவில் கவிஞர் வைகறை மற்றும் ரோஸ்லின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
இன்று தன்னம்பிக்கை உடைய ஆசிரியராக ரோஸ்லினை பார்க்கும் போது கண்கள் கலங்குகிறது வைகறைஇல்லையே என்று.
இம்மாத வீதி கூட்டத்தை நடத்தும் பொறுப்பை மிகுந்த அக்கறையுடன் அவர் செயல்படுவதை பார்க்கையில் மனம் பெருமிதம் கொள்கிறது.
வீதி தாங்கிய மகள் அவர்...
கோழிக்குஞ்சை போல பாதுகாத்துவாழ்வில் நிமிர்ந்து நிற்பவரை கண்டு மனம் நெகிழ்ச்சியுடன் ...
வீதி கலை இலக்கியக் களம் என்பது கலந்து பிரியும் கூட்டமல்ல.....
கவிஞர் முத்துநிலவன் அவர்கள் வழிநடத்த அனைவரும் இணைந்து மகிழும் குடும்பம்....
அக்குடும்பம் அழைக்கிறது மகிழ்வாய் உங்களை தன்னோடு இணைய...
வாருங்கள்.....
அன்பின் மழையில் நனைய...
இம்மாத அமைப்பாளர்கள்
திருமிகு சுதந்திர ராசன்
திருமிகு ரோஸ்லின்....

4 comments:

  1. ஒரு குடும்பம் அழிந்துவிடாமல் ஒளிர வீதி கலை இலக்கியக் களம் உதவி இருக்கிறது அதற்கு முத்துநிலவன் பெரும் பங்கை ஆற்றி இருக்கிறார் என்று கேட்கும் போது அவரை பாராட்டவே தோன்றுகிறது... பாராட்டுக்கள் முத்துநிலவன்.. வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார்.வருகைக்கு நன்றி

      Delete
  2. வீதி கலை இலக்கியக் குழுவுக்கு வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் அக்கா தங்கள் பணி.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...