Wednesday, 5 July 2017

முதல் நூல்

எனதுமுதல் நூலான

கே ஜீவபாரதியின் "வேலு நாச்சியார் நாவலில் பெண்ணியச்சிந்தனைகள் "என்ற இளநிலை முனைவர் பட்ட ஆய்வு புத்தகமாக கவிஞர் ஜீவபாரதி அவர்களின் முயற்சியால் எனது தாத்தா தியாகி மாணிக்கம் அவர்கள் பிறந்த "சுந்தரப்பெருமாள் கோவில் "இல் திருமிகு ரெங்க சாமி மூப்பனார் அவர்களால் 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது .

அந்நூலுக்காக வேலுநாச்சியார் வாழ்ந்த இடங்களுக்குச் சென்ற போது மனம் சொல்ல முடியாத உணர்வலைகளில் மிதந்து கொண்டிருந்தது ...

இன்னமும் அவரை நினைத்தாலே மனம் பெருமிதம் கொள்ளும் ...ஜான்சிரானிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற முதல் பெண்மணி .வரலாறு மறைத்தாலும் அவள் வெளிப்பட்டு வருவது யாராலும் தடுக்க முடியவில்லை ..அவளையும் சாதி விடாமல் துரத்துகின்றது என்பது தான் வேதனை .

பெண்களுக்கென்று தனிப்படை அமைத்து அதில் குயிலி என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை தலைமை ஆக்கி எல்லோருக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் ...

ஐம்பது வயதில் ஒரு பெண் ஆங்கிலேயரை எதிர்த்து யானை மேல் ஏறி போராடியிருக்கிறாள் என்றால் அவளை எப்படி நாம் கொண்டாடி இருக்க வேண்டும் ...

அவளைப்பற்றி தேடுகையில் ஆங்கிலேயர் எழுதி வைத்த சில வரிகளே ஆதாரமாக கிடைக்கின்றது ...தமிழர் வரலாறை இன்றும் மறந்து புறக்கணிக்கத் தானே செய்கின்றோம் ...

எனது முதல் நூல் வேலுநாச்சியார் பற்றி என்பதில் மிகுந்த பெருமை உண்டு ..எனது வாழ்க்கைக்கு அவரே முன்னோடி ,வழிகாட்டி எனலாம் ...

7 comments:

  1. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  2. நாச்சியார் வரலாறு அறிந்தேன்! நன்றி

    ReplyDelete
  3. நியாயமான ஆதங்கம் என்ன செய்வது தமிழர்களுக்கு அவசியமான இடத்தில் விழிப்புணர்வு வருவதில்லையே....

    ReplyDelete
  4. மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. வீரமங்கையருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  6. படிப்பது, எழுதுவது, நிகழ்வுகள் நடந்த இடத்திற்கு நேரில் செல்வது, அக்காலகட்டத்துடன் இணைத்துப் பார்த்து நிலையை உணர்வது என்ற நிலையில் அபாரமான முயற்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...