Tuesday, 6 June 2017

நாளை

நாளை
 மிரண்டு மருளும் கண்களுடன்
 பூக்கள் சேர்ந்து சோலையாகும் ....
 மௌனம் கலைத்து
 பூக்களை ரசிக்கும் ...

அமைதி ஆரவாரமாகும்
 சலசலவென ஆர்ப்பரிக்கும்

 விழிவிரிய பூக்கள்
விழியால்  கேட்க
 வரம் கொடுக்கும் ..
 அள்ளித்தழுவும்
 அன்பால் வசிகரிக்கும்
 கோபத்தில் உர்ரென்று
 கடைக்கண் காட்டும்
 அழுதழுத கண்கள்
 நான் உன் அம்மாடா என்கையில்
 என்விரல் கோர்க்கத்துடிக்கும் .
 சேட்டைகளை ரசிக்கும் ஆவலுடன் ....
விடியலுக்காக ...

8 comments:

  1. ’நாளை’ பற்றிய நம்பிக்கையளிக்கும் நயமான வரிகளுடன் கவிதை அழகாக உள்ளது.
    நல்ல விடியலுக்கான .... பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. பூக்களுக்கு எமது வாழ்த்துகள்

    ReplyDelete
  3. பள்ளித் திறப்பு கூட
    ஒரு திருவிழா போலத்தான் இல்லையா ?

    ReplyDelete
  4. வணக்கம்
    நல்லதே கிடைக்கட்டும் அருமையான வரிகள் இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. நம்ம பிள்ளைகள்
    எங்கள் தோளில் தொங்க
    நாளைய விடியல்
    நல்லதாக மலரட்டும்

    ReplyDelete
  6. புதிய கல்வியாண்டு இனிமையாய் நகரட்டும்

    ReplyDelete
  7. நல்லாபடி விடியட்டும்

    தம +1

    ReplyDelete
  8. அந்த சந்தோசமே தனி தான்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...