Thursday, 29 June 2017

எங்கே கோளாறு?

எங்கே கோளாறு?

அரசுப்பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்க்கு கல்வி உதவித்தொகை ரூ௨௦௦௦.

தனியார் பயிற்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்க்கு
ரூ 23000 கல்வி உதவித்தொகை .

அதிக மதிப்பெண்கள் பெற்று முறையாக அரசுப்பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு குறைவான தொகை ஏன் ? ,

குறைவான மதிப்பெண்கள் பெற்று ,தேர்வுக்கு வந்தால் மட்டும் போதும் என்று சொல்லி அவர்களது
சேர்க்கையைக்காட்டி அத்தனை மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை அரசாங்கத்திடம் பெற்று ,சீருடை இலவசம் ,எந்த பணமும் கட்ட வேண்டாம் ....உதவித்தொகை முலமே படித்து விடலாம் என ஆசைக்காட்டி பயிற்சிப்பள்ளி நடத்துகின்ற தனியார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஏன் அதிகத்தொகை ? .

சரி அப்படி படிக்கின்ற மாணவர்களுக்காவது பயன் இருக்கா என்றால் ...அதுவும் இல்லை வெறுமே சான்றிதழ் வாங்கிக்கொண்டு இருக்க வேண்டியது தான் .

tet தேர்வில் மதிப்பெண் வாங்கினாலும் வெயிட்டேஜ் என்று , பத்தாம் வகுப்பு ,பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் குறைந்திருந்தால் வேலை கிடைக்காது ....

இப்படி மாணவர்கள் ஏமாந்து போகும் நிலை ஏன்?

இப்படித்தான் பொறியியல் படிக்கும் மாணவர்களின் நிலையும் ..ஏதோ கிடைத்ததைப்படித்து விட்டு வேலையின்றி அலையும் ஒரு சமுதாயத்தை உருவாக்கி கொண்டுள்ளோம் ..என்ன செய்வது இந்நிலை தெளிவாக அனைவருக்கும் தெரிந்தும் ஏதும் செய்ய முடியாத கையறு நிலை ....

Wednesday, 21 June 2017

தமிழர் உரிமை மாநாடு

எது நமது நாகரீகம் ?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரீகமா ?
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட "கீழடி "நாகரீகமா ?

என் மாணவிகளிடம்நான்  அடிக்கடி விவாதிக்கும் கருப்பொருள் ...

 புதுக்கோட்டை 'திடல் 'இலக்கியக்கூடல் இன்று ,புதுக்கோட்டை மாவட்ட  த.மு.எ.க.ச.  "தமிழர் உரிமை மாநாடு" கூட்டத்தை மாலை  தமிழ்நாடு அறிவியல் இயக்கக்கூடத்தில் நடத்தியது .

மாவட்டச்செயலாளர் தோழர் மதியழகன் அவர்கள் ஒருங்கிணைக்க ,மாவட்டப்பொருளாளர்  தோழர்  ஸ்டாலின் அவர்கள் வரவேற்க  ,புதுக்கோட்டை மாவட்ட த.மு.எ.க.ச. தலைவர் தோழர் இரமா ராமநாதன்அவர்கள்  தலைமை ஏற்க ,,மாநிலசெயற்குழு உறுப்பினர் கவிஞர் முத்துநிலவன்  அவர்கள்
முன்னிலையில்,  மாநிலத்துணைச் செயலாளர் கவிஞர்  நீலா அவர்கள் பாடலுடன் துவங்க  ,சிறப்பு விருந்தினராக,   த.மு.எ.க.ச.வின் மாநிலப் பொதுச் செயலாளரும் ,சாகித்ய அகாதமி விருதாளரும் ,தமிழர் வரலாற்றை உலகுக்கு வெளிக்கொணர தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் .எழுத்தாளரும் விமர்சகருமான கவிஞர் ராசி பன்னீர் செல்வம் நன்றி கூறினார் .  

Tuesday, 6 June 2017

நாளை

நாளை
 மிரண்டு மருளும் கண்களுடன்
 பூக்கள் சேர்ந்து சோலையாகும் ....
 மௌனம் கலைத்து
 பூக்களை ரசிக்கும் ...

அமைதி ஆரவாரமாகும்
 சலசலவென ஆர்ப்பரிக்கும்

 விழிவிரிய பூக்கள்
விழியால்  கேட்க
 வரம் கொடுக்கும் ..
 அள்ளித்தழுவும்
 அன்பால் வசிகரிக்கும்
 கோபத்தில் உர்ரென்று
 கடைக்கண் காட்டும்
 அழுதழுத கண்கள்
 நான் உன் அம்மாடா என்கையில்
 என்விரல் கோர்க்கத்துடிக்கும் .
 சேட்டைகளை ரசிக்கும் ஆவலுடன் ....
விடியலுக்காக ...