Wednesday, 25 January 2017

குடியரசு தின வாழ்த்து

குடியரசு தின வாழ்த்து
---------------------------------------

காளைக்காக போராடிய
காளைகளே

இன்று உங்களின் கொம்புகள்
கூர்தீட்டப்படட்டும்.

வலியின்றி கிடைக்கும் எதற்கும்
மதிப்பில்லை...

அன்று சுதந்திரத்திற்காகப் போராடிய
குருதிகளின் ..மிச்சம் நீங்கள்..

எங்களின் எதிர்கால நம்பிக்கைகளே..
உணர்வு பெற்று
உள்ளம் தெளிந்தவர்களே..

சிந்தை தெளிய குடியரசின்
67 ஆண்டு காலப்பாதையை
கூர்ந்து பாருங்கள்...

எங்கும் முட்கள் கண்டால்
எடுத்து தூய்மை படுத்துங்கள்..

ஆங்காங்கே இருக்கும் சோலைகளை
நேசமுடன் ரசியுங்கள்...

ரசிப்பதும் நேசிப்பதும் மனிதகுணம்..

களம் இறங்கிய போராளிகளே...
வடிவமையுங்கள் உங்களை...

மனதால் இணைந்த மகிழம்பூக்களே
மணத்தால் அழியுங்கள் கயவர்களை...

ஒருவிரலால் விரட்டும் காலம் வரும்..
ஓயாமல் காத்திருங்கள்...

பண்பாட்டு போராளிகளே...
பண்பட்டு செயல்படுங்கள்...
உரிமைக்காக
புண்படவும் தயாராகுங்கள்....

நம்நாடு உங்களால் உண்மையான
குடியரசு நாடாகட்டும்....




4 comments:

  1. அருமை குடியரசு தினவாழ்த்துகள்

    ReplyDelete
  2. //மனதால் இணைந்த மகிழம்பூக்களே
    மணத்தால் அழியுங்கள் கயவர்களை...//

    மனதையும், நாசியையும் சுகந்தமாக மணக்க வைக்கும்
    மகிழம்பூ போன்ற வெகு அழகான ஆச்சர்யமான வரிகள்!

    பாராட்டுகள்.

    அனைவருக்கும் இனிய குடியரசுதின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...