Wednesday, 4 January 2017

வீதி கலை இலக்கியக்களம் -34


                                                                      வீதி
                                                  கலை இலக்கியக்களம்-34
 நாள்:25.12.16
இடம் :ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரி.புதுகை

வரவேற்புரை :

கவிஞர் சோலச்சி தனது கவியுரையால் தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர்களையும் ,அனைவரையும் வரவேற்றவிதம் சிறப்பு.

அஞ்சலி :

முன்னாள் முதலமைச்சர் செல்வி .ஜெயலலிதா அவர்களுக்கும்,கவிஞர் இன்குலாப் மற்றும் இசைவேந்தர் பாலமுரளிக்கிருஷ்ணா ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தலைமை:கவிஞர் ரேவதி

மகிழ்ச்சியை வெளியில் தேடாதீர்கள் அது உங்களுக்குள்ளேதான் இருக்கின்றது என்னும் கருத்தை ஒரு கதை மூலம் கூறி நிகழ்வை சிறப்பாகத்தொடங்கி வைத்தார்.

பாடல்:

கவிஞர் முருகதாஸ் இன்குலாப்பின் மனுசங்கடா பாடலை கீழ்வெண்மணி நினைவுநாளுக்காக சமர்ப்பித்தார்.

கவிஞர் பவல்ராஜ் அத்தமகனே அத்தானேஎன்ற கிராமியப்பாடலை இசையுடன் பாடிய விதம் மிக அருமை.

கவிஞர் மாலதியின் பள்ளி மாணவி குழந்தைப்பாடகர் வெர்ஜின் அழகே அழகு பாடலைப்பாடி அசத்தினார்.

கவிஞர் வைகறையின் பள்ளி மாணவி எவனோ ஒருவன் வாசிக்கிறான்என்ற பாடலை இனிமையாகப்பாடி நிகழ்விற்கு மெருகூட்டினார்.

கவிதை





கவிஞர் நாகநாதன் மரங்கள்”,மற்றும் மேலும் சில கவிதைகளைப்படைத்தார்.

கவிஞர் பாரதி ஏகலைவன்திருநங்கை,நான் கிறுக்கன்,நான் சொல்லுறத கேளுங்க என்ற தலைப்பில் கவிதைகள் வாசித்தார்.

கவிதை:கருப்பையா தலைமை ஆசிரியர் பொன்னமராவதி
வெள்ளைப்பணம் வைத்திருப்பவர்கள்,வெயிலில் நிற்கவேண்டும் ஏன்
என்பது போன்ற கேள்விகளைக்கொண்ட கவிதையை வாசித்தார்.

 கவிஞர் சிவக்குமார் கீற்ருக்குள் கருகின நாற்றுக்க”,நான் சொல்லுறத கேளுங்க,”ஆகிய கவிதைகளை வாசித்தார்.

கவிஞர் காசாவயல் கண்ணன் அப்போ நீட்டா எழுதுனா பாசு,இன்று நீட் எழுதுனா தான் பாசு ,போன்ற அருமையான குறுங்கவிதைகளை வாசித்து நிகழ்வினை சிறப்பித்தார்

கவிஞர் சாமியப்பன் எதிர்த்து கேட்க வேண்டிய எல்லோரையும்,வரிசையில் நிற்க வைக்கின்றது அதிகாரவர்க்கம்.என்ற கவிதையையும்

கவிஞர் பாரதிச்செல்வன்கருப்பு பண முதலைகளை பிடிக்க வலை விரித்தார்கள்என்ற கவிதையையும்,

எழுத்தாளர் செம்பை மணவாளன்காதல்ரசம் சொட்டும் கவிதையையும்,

வீதியில் விருந்தாக அனைவருக்கும் அளித்து மகிழ்ந்தனர்.

நூல் விமர்சனம்

கவிஞர் கூரா.அம்மாசையப்பனின் ஞாபகநடவுகள்வளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருது பெற்ற நூலின் சிறப்புகளை கூறிய விதம் அருமை.

ஏற்புரை

கவிஞர் கூரா .அம்மாசையப்பன் தனது ஏற்புரையில் அனைவருக்கும் நன்றி கூறி அவர் ரசித்த கவிதைகளையும்,கவிதையின் தன்மைகளையும் .
அவர் பணிபுரியும் இரும்பு உருக்காலையில் செயல் பட்டுக்கொண்டிருக்கும் மனமகிழ் முத்தமிழ் மன்றத்தின் செயல்பாடுகளையும்,அம்பறா என்ற சிற்றிதழ் குறித்தும் மிகச்சிறப்பாக பகிர்ந்து கொண்டார்.
வீதி சாதிக்க நினைப்பவர்களின் சங்கமம் என்று பாராட்டினார்.

கட்டுரை

நிருபர் ம.மு.கண்ணன் அவர்கள் ஆரோக்கியம் குறித்த இயற்கை உணவுகளைக்குறித்த ஒரு கட்டுரையை படைத்தார்.

சிறப்பு விருந்தினர்.








கவிஞர் அன்னக்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர்.

கவிஞர் நாகநாதனின் மரம் குறித்த கவிதையைப்பாராட்டி,அவர் எழுதிய மரம் குறித்த கவிதையை வாசித்தார். புதுக்கோட்டையின் சிறப்புகளை சங்க இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டினார்.
விமர்சனம் எவ்வாறு இருக்க வேண்டும் .திறனாய்வு செய்யும் போது எதைப்பற்றியெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியது மிகச்சிறப்பு.

சிறப்பு நிகழ்வு

கவிஞர் கீதா பேலியோ டயட் குறித்த சிறு அறிமுகம் செய்தார்,வீடியோக்காட்சியும் காட்டப்பட்டது.

நன்றியுரை

கவிஞர் முருகதாஸ் நன்றி கூற வீதிகலைஇலக்கியக்களம் சிறப்பாக முடிந்தது.

நிகழ்வை திட்டமிட்டு சிறப்பாக செய்த அமைப்பாளர்கள் கவிஞர் சோலச்சி,கவிஞர் முருகதாஸ் ஆகியோரை வீதி பாராட்டி மகிழ்கின்றது.









9 comments:

  1. இலக்கிய நிகழ்வுப் பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து சிறப்பாக நடத்திவரும் குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சிறப்பான நிகழ்வு.. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. பகிர்விற்கு மிக்க நன்றி. தொடர்ந்து அருமையாக நடத்திவரும் குழுவினர் எல்லோருக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    ReplyDelete
  5. அருமையான பதிவு

    ReplyDelete
  6. வீதிகலைஇலக்கியக்களம் நிகழ்ச்சிகள் தொகுப்பு நன்றாகக் cover பண்ணியுள்ளீர்கள்

    ReplyDelete
  7. நிகழ்வு பற்றிய விவரங்கள் நன்று. தொடரட்டும் வீதி கூட்டங்கள்...

    ReplyDelete
  8. அருமையான நிகழ்ச்சிப் பதிவு. வாழ்த்துகள் அனைவருக்கும் தொடரட்டும் இலக்கிய சேவை

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...