Wednesday, 23 November 2016

புத்தகத்திருவிழா உங்களுக்காகவே

புத்தகத்திருவிழா உங்களுக்காகவே

இப்படியொரு இடம் கிடைத்தால் வாழ்நாள் முழுதும் அப்படியே கரைந்து விடலாம்..

அமைதியான,காற்றோட்டமான,வெளிச்சத்துடன் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் வெங்கடேஸ்வரா பள்ளியின் நூலகத்தில்...

ஒரு இனிமையான காலைப்பொழுதில் வலைப்பதிவர் சந்திப்பு குறித்த கூட்டத்திற்காகச் சென்றோம்...நூலகம் ஆரம்பித்தது முதல் வந்து பாருங்கன்னு சகோதரி அஞ்சலி அவர்கள் அழைத்திருந்தபோதும் அன்று தான் வாய்ப்பு கிடைத்தது.

எப்போது கூட்டம் தாமதமாகத்துவங்கினாலும் கொஞ்சம் சலிப்பும்,கோவமும் வரும்...ஆனால் அன்று கூட்டமே நடக்கலன்னாலும் பரவால்ல அமைதியா அமர்ந்து படிக்கலாம்னு சொல்லிட்டே இருந்தேன்...

எந்த புத்தகத்தை விடுவது எந்த புத்தகத்தை எடுப்பது எனத்தெரியாமல் ஜெயா தடுமாற...
தேவதச்சனின் கவிதை நூலை வாசிக்க ஆரம்பித்தேன்..இரண்டு கவிதைகள் தான் வாசிக்க முடிந்தது...

எஸ்.ராவின் இரண்டு நூல்களை ஜெயா எடுத்துக்கொண்டார்..எங்களின் ஆர்வத்தை ப்பர்த்து நூலகப்பொறுப்பாளர் காசாவயல்கண்ணன் சிரித்தப்படியே கண்காணித்தார்..

கனவு இல்லம் கட்டும் அனைவரும் நூல்களுக்கென ஒரு அறை தங்கள் வீட்டில் அமையுங்கள்..






புத்தகத்திருவிழா உங்களுக்காகவே

5 comments:

  1. //கனவு இல்லம் கட்டும் அனைவரும் நூல்களுக்கென ஒரு அறை தங்கள் வீட்டில் அமையுங்கள்..//

    மிகவும் அருமையாகவும் அழகாகவும் சொல்லியுள்ளீர்கள்.

    படங்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. புத்தகத்திருவிழா உங்களுக்காகவே
    அருமையான தகவல்

    ReplyDelete
  3. 2004இல் தஞ்சாவூரில் நாங்கள் வீடு கட்டும்போது பொறியாளரிடம் நான் கூறிய முக்கியமான கருத்துகளில் ஒன்று. சாமியறை வைக்கிறீர்களோ இல்லையோ நூலகத்திற்காக ஒரு அறை அவசியம் வேண்டும் என்றேன். (நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்) பொறியாளர் சற்றே உணர்ச்சிவசப்பட்டு தான் பல ஆசிரியர்களுக்கும், படித்தவர்களுக்கும் இல்லங்கள் கட்டித்தந்ததாகவும் ஒருவரும் இதுபோல் நூலகத்திற்காக ஓர் அறை கட்டப்படவேண்டும் என்று யாரும் தன்னிடம் கேட்கவில்லை என்றும் கூறினார். இனி நீங்கள் கட்டும்போது இந்த யோசனையை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறினேன். 2016இல் எங்கள் இல்ல நூலகத்தில் சேர்ந்துள்ள எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது. எங்கள் நூலகத்தில் நூல்களின் எண்ணிக்கை பெருக என்னுடைய இரு மகன்களும் முக்கிய காரணம் என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.

    ReplyDelete
  4. படங்கள் அருமை ...
    தம +

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...