Wednesday, 14 September 2016

இரவு -1

இரவு -1
-----------------
இனிமையான கனவுகளே
இரவில் எனை தீண்டட்டும்

குளிரும் பனியில்
கம்பளிக்குள் உடல்மறைத்து
தலைநீட்டி வெதுவெதுப்பாக ...
குளிர்காய்வதாக...

கொளுத்தும் வெயிலில்
குடையென விரிந்த நிழலில்
வியர்வை துடைக்க
தென்றல் துடித்து வருவதாக

கொட்டும் மழையில்
உடலது நனைய 
மனமது சிலிர்க்க
தலைசிலுப்பி முகம் மூழ்கும் நீரில்
துள்ளி விளையாடுவதாக....

நேசிக்கும் துணையோடு
கைகோர்த்து தொலைதூரம்
மலைச்சாரலில் நடப்பதாக ...

மழலை கைவிரித்து
எனை அள்ளி மகிழ்வதாக...

புத்தகங்களில் மூழ்கி
புத்திறம் படைப்பவளாக..

இனிமையான கனவுகளே
இரவில் எனை தீண்டட்டும்...




8 comments:

  1. முதல் இரவு ...இல்லை இல்லை ..இரவு 1 கனவு மெய் படட்டும் :)

    ReplyDelete
  2. நித்தம் விரும்பிய கனவுகள்
    நித்திரைக் கலைக்காது விரியட்டும்
    புத்தம் புதிய கவிதைகள் இதுபோல்
    ஆயிரமாயிரம் மலரட்டும்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  3. புத்தகங்களில் மூழ்கி
    புத்திறம் படைக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மழலை கைவிரித்து
    எனை அள்ளி மகிழ்வதாக...//

    மழலை போன்ற மிக அழகான வரிகள். பாராட்டுகள்.

    ReplyDelete
  5. அழகான வரிகள் ரசித்தோம்

    ReplyDelete
  6. நல்லதோர் பகிர்வு. ஆசைகள் நிறைவேறட்டும்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...