Wednesday, 27 July 2016

நடமாடும் தமிழ் நூலகம்-மதிப்பிற்குரிய பேராசிரியர் கலியபெருமாள் அவர்கள்

தமிழ் நூலகம் மனித உருவெடுத்து எங்களுடன் கலந்ததுவோ..



 இன்று 27.7.16 புதுக்கோட்டையில் நடந்துகொண்டிருக்கும் பத்துநாட்கள் விழாவில் ஆறாம் நாளாகிய இன்று தமிழிசையும் நற்றமிழ் முற்றமும் நிகழ்வுகளாய்...

 அந்நிகழ்வை நிறைவு செய்ய எழுந்தார் மதிப்பிற்குரிய பேராசிரியர் கலிய பெருமாள் அவர்கள்.அவரின் எளிமை ,எல்லோரையும் என்ன பேசப்போகின்றார் இவர் என நினைக்க வைத்தது.அத்தனை ஓர் அமைதி தமிழ் முழுமையாகக் கற்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

புதுகை இலக்கியவாதிகளை பிரமிக்க வைத்து பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறார் மனதில். ஒன்றரை லட்சம் பாட்டுக்கள் மனப்பாடமாய் சொல்வாராம்..இப்போது சொல்லுங்கள் ..அவர் நூலகம் என்பது சரிதானே...

தமிழில் உள்ள இலக்கியங்கள் அனைத்தையும் மனப்பாடமாகப் பொழிகின்றார்...அவரின் தமிழ் மழையில் நனைந்து மீள விரும்பாது மணி பத்தரைக்கு மேல் ஆனபோதும் அகலாமல் நின்றோம். அத்தனை பாடல்களும் மறவாமல் அவரிடம் வந்து என்னை சொல்லு என்பது போல் கையேந்தி நிற்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

 தொல்காப்பியம் அட்டை டு அட்டை,பதிணென்கிழ்க்கணக்கு ,பதிணென் மேல்கணக்கு ,காப்பியங்கள்,பக்தி இலக்கியங்கள்,புராணங்கள்,தனிப்பாடல் திரட்டு,இன்னும் தமிழில் என்னென்ன இருக்கோ...இப்ப உள்ள பாடலாசிரியர்கள் பாடலும் மனப்பாடம் என்கிறார்...அவரைப்பற்றிக்கூறியவர். அவரிடம் பாடம் படிக்காதவர்கள் பாவம் செய்தவர்கள் தான் போல.

 ஒருத்தர் கூட எழமுடியாது தமிழால் கட்டிப்போட்டுவிட்டார். அத்தனை புலவர்களையும் ஒருவரிடத்திலே கண்டோம்..

 என் இனிய தோழி திருமிகு ரேணுகா தேவி அவர்கள் ”அய்யோ ”என்ற சொல் பட்ட கவலையைக்கூறி வியக்க வைத்தார்..அவரை இன்று கண்டதில் மனநிறைவு ...மேலும் பல உயர்வுகள் அவர் வாழ்வில் வரட்டும்.

 திருமிகு சந்திரசேகர் கம்பனில் பறவைகள் பற்றி அருமையாக கூறினார். 

புதுகை தமிழால் நனைந்தது இன்று.

வாழ்வில் ஒருமுறையாவதுபேராசிரியர் கலிய பெருமாள் அவர்களை எல்லோரும் நாம் சந்திக்கவே வேண்டும். தமிழில் இலக்கியத்தில் சந்தேகமா நாடுங்கள் அவரை .எத்தனை எளிமை எத்தனை அடக்கம்..


இறுதியில் பாடினார் பாருங்க...நல்ல தமிழ்பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்..என அங்கு தான் அவர் மென்மேலும் உயர்ந்து நிற்கிறார்.

5 comments:

  1. தாங்கள் முனைவர் இரா.கலியபெருமாள் ஐயா அவர்களின் பேச்சினை முதன் முறையாகக் கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
    கொட்டும் அருவி, வீசும் இளந்தென்றல் அவர்க
    கரந்தைப் புலவர் கல்லூரியின் முன்னாள் மாணவர் இவர் என்பதில் எங்களுக்குப் பெருமை
    ஆண்டுதோறும் இவர் சொற்பொழிவு எங்கள் வளாகத்தில் உண்டு
    நானும் நண்பர் சரவணன் அவர்களும் இணைந்து எழுதிய உமாமகேசுவரம் நூலினை வெளியிட்டு, சொற்பெருக்காற்றியவரும் இவரே

    ReplyDelete
  2. ஐயா குறித்து தாங்கள் சொன்னவை சற்றும் மிகையல்ல,,

    தங்கள் பகிர்வு அருமை,, வாழ்த்துக்கள்,, தொடருங்கள்

    ReplyDelete
  3. ஒரு நல்ல மனிதரைப் பற்றிய அறிமுகம்...

    ReplyDelete
  4. ஐயாவைப் பற்றிப் பகிர்ந்த விதம் அருமை. இவரைப் போன்றோரிடமிருந்து நாம் அதிகம் கற்றுக்கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  5. சிறப்பானதோர் அறிமுகம் நன்றி சகோ.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...