Tuesday, 19 July 2016

எப்போது குறையும்?

எப்போது குறையும்?

 மக்களுக்காக குரல் கொடுத்ததை..தனது திரைப்படங்களின் மூலமும் , வாழ்விலும் நடத்தி காட்டினார் என்பதாலும் தமிழக மக்களிடையே இன்றும் மாறாத இடத்தை பிடித்து வைத்திருப்பவர் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள்.

 இன்று தமிழக மக்களிடையே வரட்டு கவுரமாக முளைத்துள்ளது...கபாலிக்கு முன்பதிவு செய்து விட்டேன் என்பது...இவரும் நடிப்பதை, வாழ்விலும் சாதிப்பார் என்று எதிர்பார்த்ததால் இத்தனை ஆரவாரங்கள்.

ஆனால்....????

 எத்தனை படித்தாலும் தமிழன் திருந்த மாட்டானா..திருந்த விட மாட்டார்களா?

தற்காலத்துக்கு தேவையானகல்வி பற்றிய விழிப்புணர்வைத்தந்த” அப்பா” படத்துக்கு இத்தனை ஆர்வம் காட்டாத தமிழரும், ஊடகங்களும்..ஒரு பொழுது போக்கு படத்துக்கு இத்தனை ஆர்வம் காட்டுவது எப்போது குறையும்.? 

அப்போது திருந்தும் தமிழ்நாடு...

12 comments:

  1. எப்போது திருந்தும் தமிழ்நாடு... No way........no little hope.....

    ReplyDelete
  2. நீங்களே சொல்லிட்டீங்க இது ஒரு பொழுது போக்கு படம் என்று அதனால்தான் பணம் இருப்பவர்கள் இப்படி பணத்தை கொட்டி அதிக விலைக்கு டிக்கெட் வாங்கி அதைப்பற்றி பேசி கொண்டிருக்கிறார்கள் பணம் உள்ளவர்களுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வைத்தந்த” அப்பா படம் முக்கியமல்ல காரணம் அவர்கள் கல்வி அறிவு பெற்று அதன் மூலம் பணத்தை அதிக அளவில் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள் அது மட்டுமல்ல அவர்களுக்கு மற்றவர்கள் எப்படி இருந்தால் நமக்கு என்ன என்ற எண்ணம் இருப்பதால் தமது குடும்பத்தை மட்டும் கவலைப்படுவார்கள் அந்த கவலையில் இருந்து மீள அவர்கலுக்கு இந்த பொழ்து போக்கு சமச்சாரங்கள் தேவைப்படுகின்றன என்பதுதான் உண்மை

    ReplyDelete
  3. தமிழன் திருந்த மாட்டான். கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதை விடமாட்டான். நடிகைகளுக்கு கோவில் கட்டுவதை விடமாட்டான். நடிகர்களுக்காக தீக்குளிப்பதை சந்தோஷமாகச் செய்வான். இதில் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை.

    ReplyDelete
  4. ***தனது திரைப்படங்களின் மூலமும் , வாழ்விலும் நடத்தி காட்டினார்***

    அப்படிங்களா? நெஜம்மா? சத்தியமா???

    குடிக்கக்கூடாதுனு சினிமால சொன்னாரு (போயி நான் ஏன் பிறந்தேன் பாட்டை யு ட்யூபில் பாருங்க). இவருதானே டாஸ் மாக் கு பிள்ளையார் சுழி போட்டவர்???. இல்லையா?

    நீங்க ஒரு மதிப்புக்குரிய ஆசிரியை. உங்க விருப்பு வெறுப்பு ஒருபக்கம் இருக்கட்டும். உண்மையச் சொல்லுங்கங்க! அப்பத்தான் தமிழன் திருந்துவான்! உங்க தோதுக்கு உண்மையைத் திர்க்க வேணாம்- உங்க மாண்புமிமு மேல் உள்ள அள்வைல்லா கரிசனத்தால் (இது உங்க வீக்னெஸ்)! நன்றி!

    ReplyDelete
  5. கபாலி வெச்சுத்தான் (எதிர்த்தோ, ஆதரித்தோ) உங்க பொழப்பும் ஓடுது. அப்புறம் எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம்? இன்னிக்கு கட்-அவுட்டுக்கு பால் ஊத்தற அதே பசங்கதான், சென்னையில் வெள்ளம் வந்தபோது இரங்கி நின்னு வேலையும் செஞ்சது. உங்கள மாதிரி இணையத்தில் மட்டும் உலகை ரத்சிப்பவரால் ஊருக்கு ஒரு பயனும் இல்லை..

    ReplyDelete
    Replies
    1. கனடாவாசியான உங்க நாட்டவர் ஒருவர் எப்போதுமே இணையத்தில் கட்அவுட்டுக்கு பால் ஊத்தற தமிழக தமிழர்கள் என்று கிண்டல் செய்து கொண்டிருப்பார்.

      Delete
  6. அங்கே சந்திரபாபு பாலாற்றின் குறுக்கே அணை கட்டிக்கொண்டிருக்க நாம் நெருப்புடா பருப்புடா என்று சினிமா பின்னால். சினிமா, அரசியலைத் தாண்டி பொது நோக்கத்திற்காக நாம் எப்போது ஒன்று சேரப் போகிறோம். அங்கே பியூஸ்மனுஸை சிறையில் அடைத்து வதைக்கும் போதும் நமக்கு சினிமா மட்டுமே முக்கியமாகப் படுகிறது. அதை தூக்கியோ இறக்கியோ பேசவேண்டியிருக்கிறது. ஆக இதை விடுத்து, பேச வேண்டியதை பேசி / எழுதி, மற்றவற்றைப் புறந்தள்ளினால் மட்டுமே நம் சமூகம் திருந்தும். தொடர்ந்து சமூக அவலங்களுக்கு முக்கித்துவம் கொடுத்தே பழகுவோம். நல்ல சினிமாவை வரவேற்போம் / ரசிப்போம் நம்மை முட்டாளாக்காதவரை
    விஜயன்

    ReplyDelete
  7. எப்போதும் திருந்தாது... திருந்த விட மாட்டார்கள்.

    ReplyDelete
  8. எத்தனை படித்தாலும் தமிழன் திருந்த மாட்டானா..என்று கேள்விக்குரியதாக நிலைமை இருக்க,
    //மக்களுக்காக குரல் கொடுத்ததை..தனது திரைப்படங்களின் மூலமும் , வாழ்விலும் நடத்தி காட்டினார்....//
    எம்ஜிஆர் நடத்தி காட்டினாரா?
    நீங்களுமா!

    ReplyDelete
  9. நம் மக்கள் திருந்துவது சிரமமே. சினிமா என்பதைத் தாண்டி வணிகமயமாகிவிட்ட உலகில் நடப்பது அனைத்தும் வேதனையே. அதற்கு பலியாடுகள் ரசிகர்களே.

    ReplyDelete
  10. யாராலும் யாரையும் திருத்த முடியாது சகோ. அவர்களாக உணர்ந்து திருந்தினால்தான் உண்டு...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...