Wednesday, 13 July 2016

மனசாட்சி இருக்குமா இவர்களுக்கு...

மனசாட்சி இருக்குமா இவர்களுக்கு...

நேற்று என்னுடன் பணிபுரியும் தோழியின் சோகமான முகத்தை கண்டு என்னவென்று விசாரித்தேன்.போ கீதா நீயும் இல்லாம, நான் யாருகிட்ட சொல்றதுன்னு தெரியாம இருந்தேன்.மனசே பாரமா இருக்குன்னு சொன்ன போது..நீ இப்படி சொல்லமாட்டியே என்னாச்சும்மான்னு கேட்டேன்..

எனக்கு சுகர் இருக்காம் என்றார்... எப்ப பார்த்தே என கேட்டேன் இரண்டு நாள் முந்தி பார்த்தேன்....முழு செக்கப் செய்யலாம்னு போனோம்..வேற ஒன்றும் இல்ல, ஆனா சுகர் இருக்குன்னு சொன்ன போது .



எவ்ளோ இருந்தது என்றேன் 300-,720 என்றார்.. சே இருக்கவே இருக்காது ...700 இருந்தா கோமா ஸ்டேஜ்னு சொல்வாங்க.

.நீ ...வேற ஆஸ்பிட்டல்ல காட்டுனியா என்றேன்..இல்ல கீதா மனசு சரியில்லாம இருக்குதுன்னா..

 இத்தனை அதிகமா இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றவே, மாலை நாம வேற லேப்க்கு போய் பார்க்கலாம்னு சொன்னேன்..மிகவும் விரும்பி சாப்பிடும் மாம்பழத்தை வேண்டான்னு சொன்ன போது வருத்தமாக இருந்தது..

 நாங்க பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு டீச்சர் வேணும்னா இங்கயே டெஸ்ட் எடுக்க ஆள வரசொல்லவான்னு, கேட்டு வர சொல்லிட்டாங்க.. அவர் வந்து இரத்தம் எடுத்து சென்று விட்டார்..மனதில் ஒரு கவலை சுகர் இருக்க கூடாதுன்னு...

 மதியமே வந்த ரிசல்டை பார்த்து ..மகிழ்வாய் டேய் உனக்கு சுகர் அளவு நார்மல்னு வந்துருக்குமான்னு சொன்னேன். 3 நாட்களாக மாத்திரை சாப்பிட்டு, அன்று மறுபடி டெஸ்ட் குடுப்பதற்காக சாப்பிடவில்லை..

இருப்பினும் சந்தேகம் தீர்க்க இன்னுமொரு லேப்ல இன்று போய் காலையில் சாப்பிடாமலும் சாப்பிட்டும் எடுத்து பார்த்த போது மிகவும் நார்மலாக சுகரின் அளவு இருந்தது,...

 4 நாட்களில் 700 அளவு நார்மலுக்கு வருமா...இரண்டு நாள் தான் மாத்திரை சாப்பிட்டுள்ளார்கள்... நிச்சயமாக சுகர் இல்லன்னு உறுதி படுத்தியாச்சு ..

 இப்ப இருக்குன்னு சொன்ன அந்த புதுகை ”பி வெல்” ஆஸ்பத்திரி லேப் மேல கேஸ் போடத்தானே வேண்டும்.

 வைகறையை சரியா கவனிக்காம பலி கொடுத்தார்கள்..

இப்ப இப்படி ஒரு ரிசல்ட் .நான்கு நாட்களாக தூங்காம வருத்தப்பட்ட என் தோழியின் மனதிற்கு என்ன விலை கொடுப்பார்கள்.

 இப்படி மருத்துவமனைகள் இருந்தால் யாரை நம்புவது..

5 comments:

  1. மருத்துவமனைகளில் மனிதாபிமானம் செத்துப்போனதற்கு காரணம் மருத்துவ படிப்புக்கு லட்சங்கள் கட்டி படிப்பதே முதல் காரணம்
    இந்த வேதனைகளுக்கெல்லாம் காரணம் அரசுதான்
    ஆனால் இதற்கு மூலகாரணம் மக்களாகிய நாமே
    தவறுக்கு தண்டனை நாம்தான் அனுபவிக்க வேண்டும்
    இன்று உங்கள் தோழி
    நாளை இது உங்களுக்கும், எனக்கும்கூட இருக்கலாம்.

    ReplyDelete
  2. நம் வாழ்வு அவர்களுக்கு விளையாட்டு, வணிகம்.

    ReplyDelete
  3. புதிதாக இப்படியான அநீதியான செயல்களும் தொடங்கியாச்சா :(
    கில்லர்ஜீ தேவகோட்டை சொன்ன மாதிரி மக்களும்,அரசுமே இந்த கொடுமைக்கு காரணம்.

    ReplyDelete
  4. அவர்களுக்கு வேண்டியது எல்லாம் பணம் மட்டுமே...
    பணத்துக்காக எதையும் செய்வார்கள்...
    மருந்து மாத்திரை சாப்பிடும் முன் ரொம்ப யோசிக்கணும்...
    ஒருமுறைக்கு இரண்டு முறை செக்கப் செய்வது நலமே...

    ReplyDelete
  5. பணத்திற்காகவே இப்படி செய்வது கேவலம்..... பணம் கிடைத்தால் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...