Wednesday, 15 June 2016

குட்டிமா

கனத்த மௌனம் சூழ
கம்மென்றுருக்கிறது வீடு..
பாலையின் வெம்மையாய்
மௌனம் சுட ....
சாளரக்கரங்களால் தேடி அலைந்து
தன் மகிழ்வைத் தேடிப் புலம்புகிறது...
 வாசலின் நிற்கும் புங்கையோ
அழத்துவங்கிய வீட்டை
இளமென்கரங்களால் தேற்றுகிறது....
 மௌனம் கலைந்த வகுப்பறையோ
 மகிழ்வின் உச்சத்தில்...
வீட்டைக்காணாது அலறியழும்
குட்டிமாவை
 பலகணிக்கரங்களால்
 தேற்றமுடியாது..
காவலிருக்கும் வேம்புவை துணைக்கழைக்க.
வேகமாக தலையாட்டி
சிரிக்க வைக்க முயல்கிறது
 தலையாட்டி பொம்மையென ....

3 comments:

  1. அருமை அம்மா... ethilumpudhumai.blogspot.in

    ReplyDelete
  2. அருமை! சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்! கவிஞர் வைகறை மகளுக்கு நிதியாக என்னால் இயன்ற தொகையை 14-6-16 அன்று அனுப்பி உள்ளேன். நன்றி!

    ReplyDelete
  3. அருமை..... பாராட்டுகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...