Monday, 16 May 2016

விதைக்கலாம்-38

விதைக்கலாம்-38

வாழ்த்துகள் ரோஷ்ணி...


வீதியும் ,விதைக்கலாமும் ,வைகறையும்...

 விதைக்கலாம் சகோதரர்களுடன் இருக்கும் காலைப்பொழுது மனம் நிறைந்த துள்ளலுடன் துவங்கும் போல.



இன்று விதைக்கலாம் நிகழ்வின் 38 ஆவது வாரம் இன்று மேகமூட்டமான காலைப்பொழுதில்புதுக்கோட்டை பூங்காநகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் துவங்கியது. இவ்வார சிறப்பு விருந்தினராக மிகச்சிறந்த வலைப்பதிவர்,ஒளிப்பதிவாளர்,பயணங்களின் காதலரான திருமிகு வெங்கட்நாகராஜ் அவர்கள் தில்லியிலிருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும்திரு செல்வக்குமார், நிருபர் சாதிக் மற்றும் சகோ ரஃபீக்கின் நண்பர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 விதைக்கலாமின் சிறப்பு நிகழ்வாக சகோ வெங்கட் நாகராஜ் அவர்கள் வைகறையின் மகன் ஜெய்குட்டிக்காக ஆறாம் வகுப்பு படிக்கும் தனது மகள் ரோஷ்ணி, தனது சேமிப்புத்தொகையான ரூ 3000/ கொடுத்துள்ளாள் என்று கூறி பணத்தை தந்த போது, மனம் நெகிழ்ந்து போனது....

 ஒரு குழந்தையின் துன்பத்தை இன்னொரு குழந்தை உணரத்துவங்கி விட்டால் அதைவிட நற்பண்பு வேறென்ன வேண்டும்.... வாழ்த்துகள் ரோஷ்ணி..


 விதைக்கலாம் குழு உறுப்பினரான சகோ சிவாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்...வெவ்வேறு பணியில் உள்ள அவர்கள் விதைக்கலாம் மூலம் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.


 சகோ கஸ்தூரி ரங்கன் அவர்கள் அவர்களை ஒருங்கிணைத்து வழிக்காட்டுவது மிக அருமை.

சகோ சிவா வைகறைக்கான நிதியாக ரூ 500 கொடுத்து உதவினார். விதைக்கலாம் அமைப்பிற்கு நன்கொடையாக ரூ1000/திருமிகு நா.முத்துநிலவன் அவர்கள் கொடுத்திருந்தார்.

விதைக்கலாம் மணி சாரும் ,அவரது மனைவியும் அன்புடன் குழம்பி கொடுத்து உபசரித்தனர்.

 இன்றைய நிகழ்வு மிகச்சிறப்புடன் இனிதே முடிந்தது.

10 comments:

  1. அருமை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //ஒரு குழந்தையின் துன்பத்தை இன்னொரு குழந்தை உணரத்துவங்கி விட்டால் அதைவிட நற்பண்பு வேறென்ன வேண்டும்.... வாழ்த்துகள் ரோஷ்ணி..//

    செல்வி. ரோஷ்ணி அவர்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகளும், வாழ்த்துகளும், ஆசிகளும், நன்றிகளும் கூறிக்கொள்கிறேன்.

    இந்தப் பகிர்வு மிக அருமையாகவும் பசுமையாகவும் உள்ளது. அனைவருக்கும் பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. விதைக்கலாம் அமைப்புக்கும் ஆதரவளிக்கும் நண்பர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள். குழந்தைகளுக்கு என் அன்பும் ஆசியும்.

    ReplyDelete
  4. குழந்தை ரோஷ்ணியின் நன்கொடை சிலிர்க்க வைத்தது. தம் குழந்தையின் மனதில் மனித நேயத்தை விதைத்த திரு வெங்கட் அவர்கள், விதைக்கலாம் நிகழ்வில் கல்ந்து கொண்டது நல்ல பொருத்தம்! குழந்தைக்கு என் வாழ்த்தும், ஆசியும்!

    ReplyDelete
  5. ரோஷ்ணியின் மனதறிந்தோம். விதைக்கலாம் சேவை தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. விதைக்கலாம் நிகழ்வில் உங்களனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. விதைக்கலாம் நிகழ்வுகள் தொடரட்டும்......

    ReplyDelete
  7. அருமை சகோ
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அட! நம்ம ரோஷிணிக்குட்டி! வெங்கட்ஜியின் மகள்!! வாழ்த்துகள் செல்லக் குட்டிக்கு! இது போன்ற பல விதைகள் விதைக்கப்பட வேண்டும்! அருமை.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...