Sunday, 8 May 2016

விதைக் கலாம் நண்பர்களின் 37 ஆவது வாரம்

                                             “விதைக் கலாம் ”

நண்பர்களின் 37 ஆவது வாரம் இன்று புதுக்கோட்டை அய்யனார் கோவிலில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ”விதைக்கலாம்: நண்பர்கள் மூலம் நடத்தப்பட்டது... 

இதுவரை 420 மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பாகப்பராமரிக்கப்பட்டு வருகின்றன...இவர்களால்..



இளைஞர்களை குறை சொல்லியே பழக்கப்பட்டவர்கள் இவர்கள் செயல் பாடுகளை நேரில் கண்டால் இளைய சமூதாயத்தின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் நிச்சயம் வரும்.

 இதுவரை முகநூலில் மட்டுமே பார்த்து வந்த இந்நிகழ்வை நேரில் காணும் வாய்ப்பைத்தந்த சகோ கஸ்தூரி ரங்கனுக்கும்,மகன் மலைக்கும் மிக்க நன்றி. 

வாராவாரம் ஞாயிற்றுக்கிழமையன்று 5 கன்றுகள் நட்டு வருகிறார்கள். 

சமூகத்தை குறை சொல்வதை விடசெயல் பட வேண்டும் என்ற ஆவலில், கலாம் மறைந்த நாளில் துவங்கியது ”விதைக்கலாம்” என்ற குழுவிற்கான சிந்தனை. எதையும் ஆடம்பரப்படுத்தி விளம்பரம் தேடும் இக்காலத்தில் இவ்விளைஞர்கள் சத்தமின்றி சமூக நலனுக்காக,சுற்றுச்சூழலுக்காகப் பாடுபட்டு வருகின்றார்கள்.

 ஓய்வை பலனுள்ளதாக ,பயனுள்ளதாக ஆக்கும் இந்நிகழ்வு மிகவும் போற்றுதற்குரியது. குறைவான நண்பர்களால் துவங்கப்பட்ட இவ்வமைப்பு இன்று கடல் கடந்து விரிவடைந்துள்ளதை மறுக்க முடியாது.

 இன்று சகோ கஸ்தூரியும் ,மகன் மலையும் அழைத்த போது...மிகுந்த ஆவலுடன் சென்றேன்... தோழர் ரஃபீக் சுலைமான் வருவார்மா வந்துடுங்க என்றனர். காலையில்புதுக்கோட்டை அய்யனார் கோவிலில் மரம் நடும் நிகழ்வு என்றனர்.

அங்கு சென்று பார்த்தால் கம்ப்யூட்டர் பிடிக்கும் கைகள் மண்வெட்டி கடப்பாரையுடன் குழி வெட்டிக்கொண்டு... மவுஸ் பிடிக்கும் கைகளில் மரக்கன்று தவழ்ந்து.கொண்டு..


















 வழமையாக வரலாற்றை நிலைநிறுத்தும் பணியாக, கேமிராவுடன் கஸ்தூரி ...நிகழ்வுகளைப்படம் எடுத்துக்கொண்டு...

 வீதி உறுப்பினர்கள் பாதி பேர் விதைக்கலாமில் என்பதை எண்ணி பெருமையாகக் கருதுகின்றேன்..

 கலகலப்புடன் ஜாலியாக அவர்கள் மரக்கன்று நடுவதைப்பார்க்கும் போது நமக்கு வயது குறைந்து அவர்களுக்கு இணையாக செயல் படும் ஆவல் பிறக்கின்றது..







 இன்று விதைக்கலாமிற்கு ஆசிரியர் மணிகண்டன் அவர்கள் வந்திருந்தார்... 

கவிஞர் வைகறையின் மகன் ஜெய்குட்டிக்காக விதைக்கலாம் நண்பர்கள் முதல் தவணையாக ரூ 27,000 கொடுத்துள்ளனர் என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 [கஸ்தூரிரங்கன் ரூ10,000,ஸ்ரீமலையப்பன் ரூ 2,000,விதைக்கலாம் நண்பர்கள் ரூ15,000]

 சகோ கஸ்தூரியின் வழிகாட்டுதலால் விதைக்கலாம் மேலும் சிறப்புகளை நோக்கி நடைபோடுகின்றது...

 வைகறையின் கடைசி தொகுப்பை நூலாக்கம் செய்வது தன்கடமையாகசெய்கிறேன் என்று,வைகறையின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.சகோ கஸ்தூரிரங்கன்..

 இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் சூழ வாழ்வது வரமே..

  அயல்நாட்டில் அமீரகத்தில் வாழும் முகநூல் நண்பர் திருமிகு ரஃபீக் அவர்கள் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டார்.அவரை சந்தித்த தருணங்கள் இனிமையானவையாக.

 தனது மகள் ஆயிஷாவை சமூக அக்கறை உள்ள குழந்தையாக வளர்த்து வருகின்றார்.குழந்தைகள் வாசிக்க வைக்க வேண்டுமென்பதை செல்லுமிடங்களிலெல்லாம் வலியுறுத்திக்கொண்டுள்ளார்.

 புதிய வீடு கட்டும் போது அனைவரும் புத்தக அறை ஒன்று கட்டவேண்டும் என்பது அவரது விருப்பமாக உள்ளது..
எளிமையாக எந்த வித ஆடம்பரமும் இன்றி அவர் பழகியது அருமை. வைகறைக்காக நீண்டுள்ள உதவிக்கரமாய்..ரூ 5000/. கொடுத்து உதவியுள்ளார். 

முகநூல் நட்பு கண்ணீர் துடைக்கவும் நீளும் என்பதை உணர்த்தியுள்ளது. 

விதைக்கலாம் குழு மேலும் பல உயரங்களைத்தொட வாழ்த்துகள்.

 மனம் நிறைந்த நன்றியை வீதி அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றது.

5 comments:

  1. இனிய நிகழ்வு...... அடுத்த விதைக்கலாம் எப்போது? ஒவ்வொரு ஞாயிறுமா?

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு ஞாயிறும் அய்யா கண்டிப்பாய் நீங்கள் கலந்துகொண்டால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்

      Delete
  2. ஆமாம் சார்..இது 37 ஆவது வாரம்...பயனுள்ள செயல்பாடுகள் இளைஞர்களால்.

    ReplyDelete
  3. பெருமையாய் இருக்கிறது. மென்மேலும் வளர விரிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. விதைக்கலாம் பணிகள் பெருமைக்குரியதாய் விரிகின்றது....ஜெய்குட்டிக்காக உதவும் கரங்கள் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுகள்...வாழ்த்துகள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...