Wednesday, 4 May 2016

வைகறை நினைவஞ்சலி கூட்டம் -வீதி 27

வீதி இலக்கியக்களம் கூட்டம் -27 
வைகறை-நினைவஞ்சலி கூட்டம்
 --------------------------------------------------

இப்படியொரு கூட்டம் நடத்துவோம் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை..வீதியின் முக்கிய செயல்பாட்டாளராக வைகறை பரிணமிக்கும் வேளையில் ,வைகறையை காலம் பிரித்துவிட்ட கொடுமை.

 வைகறை படத்தில் பார்க்க நேர்ந்த கொடுமை..

கனத்த மௌனமாய் வீதிக்கூட்டம்..வைகறைக்கு அஞ்சலி செலுத்திய காட்சி....

வெறும் அஞ்சலி செலுத்துவதாக கூட்டம் இருப்பது மட்டுமின்றி அவரது குடும்பத்திற்கு உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது..







































 வைகறை சம்பாதித்த மனங்கள், அவரின் குடும்பத்திற்கு பேருதவியாகத் திகழ வேண்டும் என்பதே அனைவரின் ஒட்டு மொத்த கருத்தாக இருந்தது.. 

தங்களின் சுகதுக்கங்களை கட்டாயம் பகிர்ந்து கொள்வது அவசியம் என்பதை வைகறையின் இழப்பு உணர்த்தியுள்ளது....

 காப்பாற்றி இருக்க கூடிய உயிரை இழந்து விட்ட கொடுமை ,அனைவரின் வேதனையை அளவிட முடியாது செய்தது....

 வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் நிறுவனர் கவிஞர் கதிரேசன் அவர்கள் வைகறைக்கு கவிதையால் அஞ்சலி செய்து முதல் கட்டமாக தொகையைக்கொடுத்து உதவியுள்ளார்கள்.

 பாரி மெட்ரிக் பள்ளியின் நிறுவனர் பேராசிரியர் துரை பாண்டியன் அவர்கள் நிதி அளித்து உதவியுள்ளார்கள்.
தமிழாசிரியர் கழகம்,வீதி உறுப்பினர்கள்,ஆக்ஸ்போர்டு நிறுவனர் சுரேஷ் ஆகியோர் நிதி உதவி அளித்துள்ளார்கள்.

 திருச்சியிலிருந்து வலைப்பதிவர் தமிழ் இளங்கோ சகோதரர் கலந்து கொண்டு வைகறையின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டதை பகிர்ந்து கொண்டார். 

தஞ்சையிலிருந்து வலைப்பதிவரும் சகோதரருமான கரந்தை ஜெயக்குமார் கலந்து கொண்டு வைகறையின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

திருச்சியிலிருந்து கவிஞர் கலியமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு வைகறை மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தினார்.

 ஒவ்வொருவரையும் வைகறை தனது அன்பினால்,நேர்மையான பண்பினால்,புன்னகையால்,வழிகாட்டலால்,கூட இருப்பவர்களை முன்னுக்கு கொண்டு வரும் தன்மையால்,கல்மிஷம் இல்லாத தன்மையால்,மனிதநேயத்தால் தன்பால் ஈர்த்துக்கொண்டதை காணமுடிந்தது...

 கவிஞர் முத்துநிலவன் அஞ்சலி கூட்டத்தை துவக்கி வைத்து அனைவரின் ஆலோசனையையும் கூறும் படி கேட்டுக்கொண்டு...வைகறை நினைவு மலர் வெளியிடுவது குறித்த கருத்துகளைக்கேட்டார். 

கவிஞர் தங்கம் மூர்த்தி வைகறை மீதுள்ள அன்பு கவிதை எழுதி தீர்வதல்ல...உண்மையாக வாழ்ந்த மகா கவிஞன் என்பதால் தான் இங்கு அனைவரும் ஒன்று கூடியுள்ளோம்...

வைகறையை காலம் கடந்து நம்முடன் வாழ வைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.நல்ல கவிஞனுக்காக இதைக்கூட செய்யவில்லையெனில் பேனா பிடித்து எழுதவதற்கு பொருள் என்ன உள்ளது?

நவீன இலக்கியத்தில் தமிழ்நாட்டை புரட்டி போடக்கூடிய திறமை வாய்ந்த கவிஞனை தமிழகம் இழந்து விட்டது என்று கூறினார்.

அவையோரின் ஏற்புடன் கவிஞர் நா.முத்துநிலவன் செய்ய வேண்டிய செயல்களை முன் மொழிந்தார்.

 1]வைகறை இழந்து தவிக்கும் அவரது ஜெய்குட்டி அப்பா இத்தனை மனிதர்களை சேர்த்து வைத்திருந்தார் என்பதை உணரும் வகையில் அவனுக்காக வைப்பு நிதி பெரும் தொகையாக திரட்ட வேண்டியது அவசியமான ஒன்று.

 2]கணவரை இழந்து தவிக்கும் அவரது மனைவிக்கு கருணை அடிப்படையிலான பணியை உடனே பெறுவதற்கான முயற்சியை துவங்க வேண்டும். 

3]ஜெய்குட்டியின் கல்விச்செலவுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

 4]கவிஞர் ராசி பன்னீர்செல்வம் அவர்கள் கூறியபடி ”வைகறை நினைவு விருது” 35 வயதுக்குட்பட்ட இளம் கவிஞர்களுக்கு வழங்க வேண்டும். 

5]கவிஞர் வைகறை குறித்த குறும்படம் ஒன்று வெளியிட வேண்டும். 

6]அவரது நான்காவது கவிதைத்தொகுப்பை நூலாக வெளியிட வேண்டும். என்றார்.



இம்முடிவுகள் நிறைவேறும் வரை நமது கண்ணீரின் ஈரம் காயாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்...கவிஞர் தங்கம் மூர்த்தி


 ஜெய்க்குட்டியின் பெயரில் போடப்படும் வைப்புத்தொகைக்காக ,ஒரு பொதுவான சேமிப்புக்கணக்கு ஒன்று துவங்கி ஆகஸ்ட் 15 க்குள் எதிர்பார்த்த பெரும் தொகையை சேகரித்து ஜெய்க்குட்டியின் பெயரில் போட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது..

 வெளிப்படையாக உதவி செய்தவர்கள் விவரங்கள் அறிவிக்கப்படும்... 

உண்மையான அன்புடன் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்வதாக கூறியுள்ளனர்...

இத்தனை நல்ல உள்ளங்களை கொண்டமைக்கு வீதி மனம் நெகிழ்கின்றது. 

நினைவஞ்சலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியை வீதி கூறிக்கொள்கின்றது.

9 comments:

  1. மிகவும் வருந்துகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. மீள முடியாத சோகம் சார்.

      Delete
  2. வெளியிட்டுள்ள படங்களை எடுத்த பிறகும் நண்பர்கள் வந்தவண்ணம் இருந்ததால் ஒருகட்டத்தில் இருக்கைகள் போதவில்லை எனும் நிலை வந்தது. முடிவுகளைச் சரியாக வெளியிட்டுள்ளீர்கள் சகோதரி. இனிசெயல்படும் நேரம்.

    ReplyDelete
  3. மவுன அஞ்சலி மட்டுமே எனது பதில். வேறு என்ன சொல்வது. இந்த பதிவிலுள்ள ஒரு படத்தை (நான் இருப்பது) மட்டும் , அன்பின் காரணமாக உங்கள் அனுமதியின்றி எனது கட்டுரைக்கு எடுத்துக் கொண்டேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு இல்லாத படமா சார்....வைகறையின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பது ஒன்று தான்..நம்மால் முடியும்..சார்.

      Delete
  4. வைகறை நிதி முடிவை வரவேற்கிறேன் (:

    ReplyDelete
  5. கை கொடுப்போம் வைகறையின் குடும்பத்திற்கு!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...